சினிமாக்களைப் போல வெப் சீரிஸ்களுக்கும் நட்சத்திரங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். திரையரங்குகளுக்கு செல்ல முடியாதவர், வீட்டிலிருந்தே கண்டு களிக்கும் தளமாக ஓடிடி உருமாறி உள்ளது. அதனால் இதை நடிகர், நடிகைகள் தவிர்க்க முடியவில்லை. இந்த வகையில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'பிருந்தா'.
ஆகஸ்ட் 2 -ஆம் தேதி முதல் பிருந்தா தொடர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. சோனி லைவ் தளத்தில் வெளியாகும் இந்தத் தொடரை சூர்யா மனோஜ் வாங்கலா எழுதி இயக்கியுள்ளார்...
ஆடிங் அட்வர்டைசிங் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள, பிருந்தா மூலம் அற்புதமான திறமைகளைக் கொண்ட தென்னிந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன் ஓடிடி உலகில் கால்பதிக்கிறார். ''இந்தத் தொடரை சோனி லைவ் மூலம் இந்திய பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், பிருந்தா பார்வையாளர்களைக் கவர்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கவும் செய்யும். இது ஒரு சக்திவாய்ந்த, பெண் தலைமையிலான கதை, இந்தத் தொடரை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிருந்தாவின் கதாபாத்திரம் கதையின் ஓட்டத்தில் பல மர்மங்களைக் கட்ட விழ்க்கும்.
த்ரிஷா கிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார் சூர்யா. தினேஷ் பாபுவின் ஒளிப்பதிவு மற்றும் அன்வர் அலி எடிட்டராக பணியாற்றியுள்ளனர். இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மெளலி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.