ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரைக்கதிர்

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்துக்கு பைசன் காளமாடன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மே 2024, 4:27 pm

நடிப்புடன் கடலில் சர்ஃப்பிங் செய்யும் சாகச விளையாட்டிலும் ஆர்வமுள்ள ரெஜினா, கடல் மற்றும் கடலோர இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னைக் கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தற்போது சப் மெரினா கிளப்புடன் இணைந்து பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். "கடற்கரை மற்றும் நீர்நிலைகளின் அவசியம் நமக்குத் தெரியும். அதனைத் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. நீர்நிலைகளைக் குப்பைக் கிடங்காக மாற்றிவிடக் கூடாது. நம் சுற்றுச்சூழலிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காகவே இதுபோன்ற பணிகளை ஆர்வமாகச் செய்து வருகிறேன்' என்றார்.

நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக் கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் ஷங்கர்ராஜா, "மணி இன் தி பேங்க்' எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆல்பத்தின் விடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடிப்பதுடன் பாடலையும் எழுதியிருக்கிறார் யுவன்.

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்துக்கு பைசன் காளமாடன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6}ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாகக் கொண்டு வருகிறது. துருவ் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாள்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன.

இதற்கு ஒரு தீர்வாக வந்தவைதான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வரிசையில் "ஓடிடி பிளஸ்' என்கிற புதிய ஓடிடி தளம் இணைகிறது. இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். தளத்தை இயக்குநர் சீனுராமசாமி துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.