எட்டு எட்டா நடந்தா..!

எட்டு வடிவ நடைப்பயிற்சி: ஆரோக்கியமா அல்லது ஆபத்தா?
எட்டு எட்டா நடந்தா..!
Published on
Updated on
1 min read

எட்டு வடிவ உடற்பயிற்சி எனும் நடைப்பயிற்சி நல்லது என பெரும்பாலானோர் அண்மைக்காலமாக நடக்க ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு நடப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் மருத்துவர்களும், அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பவர்களும்!

பிசியோதெரபிஸ்டுகள் கூறிவந்த நிலையில் சில மருத்துவ நிபுணர்கள், எலும்பு மருத்துவ நிபுணர்கள் மட்டும் " நேராக நடப்பதே நல்லது' என்கின்றனர்.

இதுகுறித்து சென்னை பிரஷாந்த் மருத்துவமனையின் எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் எஸ்.ஆறுமுகம் கூறுகையில், "" இந்த எட்டு வடிவில் நடைபயிற்சியால் கால்கள் மாறுபடும். நேராக நடப்பது இயற்கை எலும்புக்கு பக்கவாட்டில் குறுக்குவாட்டில் "லிக்கமென்ட்' எனும் எலும்பு அசைவுத்தன்மம் மூட்டு நகராது இருக்க "நான்கு எலும்பு

ஜவ்வு நார்கள்' உள்ளவை வலுவாக ரப்பர்போல இருக்கும். இவை மாறிமாறி நடப்பதால் அதன் வலு குறையும். அதனால் காலில் அழுத்தம் அதிகமாகி எலும்புகளில் கால் வலி கூடும்'' என்கிறார்.

நமது டிரெட்மில்லில் கூடுதல் குஷனிங் இருந்தாலும், ஜாகிங் அல்லது ஓட்டத்தின் அதிக தாக்கம் கணுக்கால், முழங்கால், இடுப்புகளில் மூட்டு வலியை ஏற்படுத்தும். அதேபோல், ட்ரெட்மில் இயந்திரப் பயிற்சி என்பதும் நல்லதல்ல என அமெரிக்காவில் உள்ள சீயடெல் தண்டுவட மருத்துவ ஆய்வு மையம் அண்மையில் அறிவித்துள்ளது.

தரையில் நடப்பதால் நாம் இயற்கையாக நாம் நகர்ந்து கொண்டே நடப்போம். ட்ரெட்மிலில் நாம் நகர்த்தப்படுவோம். இதன்படி, உண்மையை அறியலாம்.

"நல்வாழ்வியல் புரிதலின்றி நல்லது' என பல ஆரோக்கியமற்ற பயிற்சிகளைச் செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com