உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சரத்குமாருக்கு பிறந்த நாள் பரிசு!

'ரேக்காசித்திரம்', 'மாளிகப்புரம்' போன்ற பல படங்களைத் தயாரித்த காவ்யா ஃபிலிம் நிறுவனம், சரத்குமார் நடிக்கவுள்ள படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2026, 4:07 am IST

'ரேக்காசித்திரம்', 'மாளிகப்புரம்' போன்ற பல படங்களைத் தயாரித்த காவ்யா ஃபிலிம் நிறுவனம், சரத்குமார் நடிக்கவுள்ள படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. சரத்குமாரின் பிறந்தநாளான ஜூலை 14-ஆம் தேதி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'கிங்ஸ்டன்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி, இயக்குகிறார்.

தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி இப்படம் குறித்து பேசும்போது, 'சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு எங்களது அடுத்த தமிழ்ப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பல தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவரது நடிப்புத் திறமையும் பன்முகத்தன்மையும் திரைத்துறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவை.

ஒரு வலுவான கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய படக் குழுவும் இணைந்திருக்கும் இத்திரைப்படத்துக்கு சரத்குமாரின் வருகை கூடுதல் பலமாக இருக்கும். இயக்குநர் கமல் பிரகாஷ் இந்தக் கதையை மிகத் தெளிவோடும் நம்பிக்கையோடும் அணுகியுள்ளார். ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்' என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தொடங்கவுள்ளது. முழு படப்பிடிப்பையும் நவம்பர் 2026-க்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.