மத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

முதற்கட்டத்தை முடித்த மாகாளி

'மாகாளி' திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Published On :

'மாகாளி' திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாரி செல்வராஜ் வழங்கும் இந்தப் படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாள்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நிறைவடைந்துள்ளது. சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்னையை அழுத்தமாகப் பேசும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் இருக்கும் உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பில் வேகம் காட்டி வரும் 'மாகாளி', தற்போது பரபரப்பாகத் தயாராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.