
குன்னூர் பெண் விஞ்ஞானிக்கு உலக அங்கீகாரம்!
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த இளம் இயற்பியல் விஞ்ஞானி முனைவர் அனுரோஷினி ராமகிருஷ்ணன், ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க 'அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்' ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த இளம் இயற்பியல் விஞ்ஞானி முனைவர் அனுரோஷினி ராமகிருஷ்ணன், ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க 'அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்' ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் சாதனைகள், கல்விசார் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இது மிக உயர்ந்த கல்வித் தகுதிக்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஹம்போல்ட் நெட்வொர்க்கில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, இந்த அங்கீகாரத்தின் சிறப்புகளை அறியலாம்.
இதுகுறித்து அனுரோஷினி ராமகிருஷ்ணன் கூறியது:
''குன்னூர் செயின்ட் ஜோசப் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (2011) படித்தேன். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை (பி.எஸ்சி.), முதுநிலை (எம்.எஸ்சி.) பட்டங்களைப் பெற்றேன். பிட்ஸ் பிலானியில் குறைகடத்தி நானோ பொருள்கள், அவற்றின் ஒளி-மின்னணுப் பண்புகள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றேன்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி, மேம்பட்ட குறைந்த பரிமாணப் பொருள்கள் , கிராஃபீன், சென்சார்களுக்கான சாதனத் தளங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினேன்.
மார்ச் 2026 முதல் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து, குவாண்டம் பொருள்கள், இரு பரிமாண பொருள் தளங்கள் மற்றும் மூலக்கூறு மின்னணுவியல் ஆகிய துறைகளில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
தற்போது நான் பெற்றுள்ள அங்கீகாரமானது எதிர்கால குவாண்டம் தகவல் செயலாக்கம், மூலக்கூறு அளவிலான மின்னணுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆராய்ச்சிப் படிப்பாகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் இளம்பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்போது, புதிய சிந்தனைகளும், புதுமையான அணுகுமுறைகளும் உருவாகி, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உதவும். இந்த வெற்றிக்கு உறுதுணையாக வழிகாட்டிகள், குடும்பத்தினர், சர்வதேச ஆய்வு வாய்ப்பை வழங்கிய அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் அமைப்பினரும் உள்ளனர்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





