தென் னாட் டுத் தில க ரா கப் புகழ் பூத்த வ.உ.சி, 1934-இல் "தேசிய சங் க நா தம்' எனும் தலைப் பில் 32 பக் கங் க ளில் டாக் டர் பி.வர த ரா ஜுலு நாயு டு வின் வாழ்க்கை வர லாற்றை எழு தி னார். இந் தச் சிறு வெ ளி யீட் டில் டாக் டர் நாயு டு வின் தேசி யத் தொண் டு கள் 1933 வரை யில் நிகழ்ந் தவை மிகச் சுருக் க மா கக் கூறப் பட் டுள் ளன.
"டாக் டர்' எனும் பட் டப் பெயர், அவர் சித்த வைத் தி யம், ஆயுர் வேத வைத் தி யம் இரண் டி லும் தேர்ச்சி பெற்று மருத் து வத் தொழி லில் பெரும் பு கழ் பெற் ற தால் அமைந் தது.
சே லம் மாவட் டம் ராசி பு ரத் தில் 1887-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி வர த ரா ஜுலு நாயுடு பிறந் தார். தந்தை பெயர் பெரு மாள் நாயுடு. தாயார் பெயர் குப் பம் மாள்.
உயர் நி லைக் கல்வி கற் கும் பொ ழுதே நாடெங் கும் பர விய வந் தே மா த ரம் இயக் கம் இவ ரைக் கவர்ந் தது. இளை ஞ ரான வர தரா ஜுலு முற் போக் கா ளர் சங் கம் எனும் ஓர் அமைப்பை மாண வர் க ளி டையே அமைத் தார். அன் னி யத் துணி விலக்கு, சுதே சி யம் எனும் தேசிய லட் சி யங் களை முழங் கி ய தால் பள் ளி யில் இருந்து விலக வேண் டிய சூழ் நிலை ஏற் பட் டது.
பத் தொன் பது வய தி லேயே தேசிய அர சிய லில் ஈடு பட் ட தைப் பற்றி பிற் கா லத் தில் 1936 செப் டம் பர் 26-ஆம் தேதி யிட்ட தமது தமிழ் நாடு இத ழின் தலை யங் கத் தில் பின் வரு மாறு கூறி யுள் ளார்:
""1906-ஆம் ஆண் டில் எனது 19 வய தில் இந் திய தேசிய இயக் கத் தில் நான் ஈடு பட் டேன். 1908-ஆம் வரு ஷம் புதுச் சே ரிக் குச் சென்று, சுப் பி ர ம ணிய பார தி யா ரின் ஆசீர் வா தத் தைப் பெற் றேன்.''
1916-இல் தேசிய அர சிய லில் தீவி ர மா கப் பங் கேற் றார். இந்த வர லாற் றுச் சிறப் பை, தமிழ்த் தென் றல் திரு.வி.க. தமது வாழ்க் கைக் குறிப் பு க ளில் பின் வ ரு மாறு குறிப் பிட் டுள் ளார்:
""பால்- பால்- லால் என்று பார த நாடு முழங் கிய கால முண்டு. நாயக் கர், நாயுடு, முத லி யார் என்று தமிழ் நாடு முழங் கிய கால முண்டு''
மேலே "பால்' என் பது, பால கங் கா தர தில க ரை யும்; "பால்' என் பது, விபின் சந் திர பாலை யும்; "லால்' என் பது, லாலா லஜ ப தி ரா யை யும் குறிப் பி டு வ ன வா கும். இவ் வாறே, நாயக் கர் என் பது, ஈ.வெ.ராம சாமி நாயக் க ரை யும்; நாயுடு என் பது, டாக் டர் பி.வர த ரா ஜுலு நாயு டு வை யும்; முத லி யார் என் பது, திரு.வி.கல் யா ண சுந் தர முத லி யா ரை யும் குறிப் பி டு வ ன வா கும்.
மு தல் சிறை வா சம், 1918-இல் மதுரை ஹார்வி மில் தொழி லா ளர் வேலை நிறுத் தத்தை ஊக் கு வித்து ஆற் றிய பேச் சுக் காக விதிக் கப் பட் டது. சொற் பொ ழி வில் அரசு நிந் த னைக் கு ரிய குற் றம் இருப் ப தா கக் குறிப் பி டப் பட்டு, பதி னெட்டு மாத கடுங் கா வல் தண் டனை விதிக் கப் பட் டது. விசா ர ணை யில், நாயு டு வின் சார் பில் சேலம் சி.இரா ஜ கோ பாலா ச் சாரி வாதா டி னார். இவ ருக் குத் துணை யாக சேலம் ஆதி நாரா யண செட் டி யார், மதுரை ஜார்ஜ் ஜோசப், எம்.கே.சுந் த ர ராஜ ஐயங் கார், ஆர்.எஸ். வர த ரா ஜுலு நாயுடு ஆகிய வழக் க றி ஞர் கள் உத வி னர். உயர் நீதி மன்ற மேல் முறை யீட் டில் ராஜாஜி எழுப் பிய சட்ட நுணுக் க வா தத் தால், நாயுடு விடு தலை பெற் றார்.
அ வர் சேலத் தில் வாரப் பதிப் பாக 1919-ஆம் ஆண் டின் இறு தி யில் ஆரம் பித்த "தமிழ் நாடு' இத ழும் அவர் எழு திய இரு கட் டு ரை கள், ராஜ து ரோ க மா னவை என்று குற் றம் சாட் டப் பட்டு விதிக் கப் பட்ட ஒன் பது மாதக் கடுங் கா வல் தண் ட னை யால் இரண் டாம் சிறை வாசத்தை ஏற் றார்.
1923-இல் பெரி ய கு ளம் தாலுக்கா மாநாட் டில் தடை உத் த ரவை மீறிப் பேசி ய தற் காக ஆறு மா தம் கடுங் கா வல் தண் டனை விதிக் கப் பட் டது. இது மூன் றா வது சிறைத் தண் ட னை யா கும்.
24-ஆம் வய தில் அவர் ருக் மணி எனும் பெண் ம ணியை திரு ம ணம் செய் து கொண் டார்.
1920 ஆகஸ் டில் காந் தி ய டி கள் திருப் பூர் வந் த பொ ழுது, டாக் டர் வர த ரா ஜுலு நாயுடு வீட் டில் தங் கி னார். 1921-இல் மீண் டும் சேலம் வந் த பொ ழுது டாக் டர் வர த ரா ஜுலு நாயுடு வீட் டில் தங் கி னார். காந் தி ய டி கள் அப் பொ ழுது நடை பெற்ற மக ளிர் கூட் ட மொன் றில் நாயு டு வின் மனைவி ருக் மணி, தாம் அணிந் தி ருந்த நகை கள் அனைத் தை யும், காந் தி ய டி க ளி டம் கொடுத் து விட் டார்.
1922-இல் காந் தி ய டி கள் சிறைப் ப டுத் தப் பட் ட பொ ழுது, அதற்கு எதிர்ப் புத் தெரி விக்க புது மை யைக் கையாண் டார், டாக் டர் நாயுடு. அர சாங் கத் துக் கு ரிய வரு மான வரி யைக் கட்ட மறுத் தார். காந் தி ய டி கள் விடு தலை செய் யப் பட்ட பிற கு தான் வரி கட்ட முடி யும் என அறி வித் துப் புது மையை நிகழ்த் தி னார். வரி மறுப் பைக் குறிப் பிட்டு டாக் டர் நாயுடு அர சாங் கத் திற்கு எழு திய கடி தம், காந் தி ய டி க ளின் "யங் இந் தியா'வில் வெளி வந் தது.
1925-இல் தமிழ் நாடு மாகாண காங் கி ரஸ் கமிட் டி யில் தலை வ ரா க வும் பணி யாற் றி னார். 1929-இல் காங் கி ர úஸôடு கருத்து வேற் றுமை கொண்டு காங் கி ரûஸ விட்டு வெளி யே றி னார். பின் னர் ஆர்ய சமா ஜத் தில் இணைந் தார்.
"ஜஸ் டிஸ்' கட் சியை எதிர்த் த தில் டாக் டர் நாயு டு வின் பங் க ளிப் பைப் பின் வ ரு மாறு திரு.வி.க. பாராட் டி யுள் ளார்.
""ஜஸ் டிஸ் கட்சி முளை விட் ட போது, அதைக் கிள் ளி யெ றி வ தற் கென்று புறப் பட் ட வர் டாக் டர் வர த ரா ஜுலு. வர த ரா ஜு லு வின் பிர சா ரம் தமிழ் நாட் டில் நாலா பக் க மும் பர வா வி டின் "ஜஸ் டிஸ்' கொடி நாடு முழு வ தும் பர வி, காங் கி ரஸ் உணர்ச் சிக் கேடு சூழ்ந் தி ருக் கும். தென் னாட் டில் காங் கி ரஸ் பக் தியை வளர்த்த பெருமை நாயு டு வுக்கு உண்டு'' என்று திரு.வி.க. எழு தி யுள் ளார்.
ஜி.சுப் பி ர ம ணிய ஐயர், பார தி யார், திரு.வி.க.வைத் தொடர்ந்து, தேசி யத் தமிழ் இத ழி யல் துறையை மேலும் வளர்த் த வர் டாக் டர் நாயுடு. இவ ரு டைய இத ழி யல் பணி, "பிர பஞ்ச மித் தி ரன்' எனும் வார இதழ் மூலம் தொடங் கி யது. மங் க லம் ஷண் முக முத லி யார் உரி மை யா ள ரா க வும், சுப் பி ர ம ணிய சிவா ஆசி ரி ய ரா க வும் நடத் தப் பட்ட பிர பஞ்ச மித் தி ரன் மிகுந்த பொருள் இழப் பில் தத் த ளித் த பொ ழுது, டாக் டர் நாயுடு 1916-இல் அந்த இதழை வாங் கி னார். அவர் ஆசி ரி ய ரா னார். இரண் டாண் டு கள் வெளி வந் தது.
1918-ஆம் ஆண்டு டாக் டர் நாயுடு சிறைப் பட் ட பொ ழுது, ஆயி ரம் ரூபாய் ஈடு கா ணம் அர சால் கேட் கப் பட்டு, பத் தி ரிகை முடக் கப் பட் டது.
பி ர பஞ்ச மித் தி ர னுக் குப் பிறகு தமிழ் நாடு இத ழைத் தொடங்கி ஆசி ரி ய ராக இருந்து ஆற் றிய நாயு டு வின் பணி ஒரு வர லாற் றுச் சாத னை யா கும். அவ ருக்கு இவ் வ கை யில் பெரி தும் துணை நின் ற வர் "பேனா மன் னன்' என்று பிற் கா லத் தில் புக ழப் பட்ட டி.எஸ்.சொக்க லிங் கம் ஆவார். 1919-இன் இறு தி யில் சேலத் தில் வாரப் பதிப் பாக வெளி வ ரத் தொடங் கிய தமிழ் நாடு இத ழில், 21 வய தான இளை ஞர் டி.எஸ்.சொக்க லிங் கம் 1923-இல் துணை ஆசி ரி ய ரா னார். 1926 ஏப் ரல் 14-இல் வாரப் பதிப் பு டன் நாளி த ழை யும் தொடங் கி னார். பா ர தி யார் பாடல் க ளைச் சித் திர விளக் கங் க ளாக வெளி யிட்ட முதல் இதழ் தமிழ் நாடு எனும் பெருமை பெற் றது.
""காலஞ் சென்ற ஜி.சுப் பி ர ம ணிய ஐ ய ரைப் போல டாக் டர் நாயு டு வும் பத் தி ரிகை உல கில் ஒரு தனிச் சுட ராக விளங் கி னார். தேசிய ஆதர் சங் க ளு டன் வெற் றி க ர மாக ஒரு தேச பாஷை பத் தி ரிகை நடத் திய வீரர் க ளில் டாக் டர் நாயு டு வைக் காலஞ் சென்ற ஜி.சுப் பி ர ம ணிய ஐ ய ருக்கு இணை யா கச் சொல் ல லாம்'' என்று வ.உ.சி. "தேசிய சங்க நாதம்' எனும் வெளி யீட் டில் சுட் டிக் காட் டி யுள் ளார்.
"இந் தி யன் எக்ஸ் பி ரஸ்' இத ழும் டாக் டர் நாயு டு வின் முயற் சியே. 1916-லேயே ஆங் கில இதழ் ஒன் றைத் தொடங்க வேண் டும் என விரும் பிய டாக் டர் நாயுடு, 1932-இல் தமிழ் நாடு நாளி த ழுக்கு சகோ த ரப் பத் தி ரி கை யாக "இந் தி யன் எக்ஸ் பி ரஸ்' எனும் பெய ரில் ஓர் ஆங் கில நாளேட் டைத் தொடங் கி னார். ஆனா லும் சில மாதங் க ளி லேயே "ட்ரீ பிரஸ் ஆப் இந் தி யன்' எனும் சுதேச செய்தி நிறு வ னத்தை நிறு விய தேசிய வீரர் எஸ்.சதா னந் தம் வச மா யிற்று "இந் தி யன் எக்ஸ் பி ரஸ்'.
÷1930-32-களில் காந் தி ய டி கள் நடத் திய உப்பு சத் தி யா கி ர கத் தை யும், சட் ட ம றுப்பு இயக் கம் முத லி ய வற்றையும் டாக் டர் நாயுடு எதிர்த் தது இவ ரு டைய அர சி யல் வீழ்ச் சிக் கும், தமிழ் நாடு இத ழின் நலி விற் கும் கார ண மா யிற்று.
÷வி டு தலை பெற்ற இந் தி யா வில் டாக் டர் நாயுடு 1951-இல் சென்னை மாநி லச் சட் ட மன்ற மேலவை உறுப் பி ன ராக சேலத் தில் இருந்து காங் கி ரஸ் சார் பில் போட் டி யின் றித் தேர்ந் தெ டுக் கப் பட் டார். 1952-இல் நடை பெற்ற பொதுத் தேர்த லில், சேலம் நக ரத் தில் போட் டி யிட்டு கம் யூ னிஸ்ட் வேட் பா ள ரான மோகன் குமா ர மங் க லத் தைத் தோற் க டித்து சட்ட மன்ற உறுப் பி ன ரா னார். சிற் சில சந் தர்ப் பங் க ளில் பெரி யா ருக் கும், காம ரா ச ருக் கும் இடையே பால மா க வும் திகழ்ந் தார்.
÷23.7.1957-இல் அவர் இறந் த பொ ழுது அவ ரு டைய இறு திச் சடங் கு கள் ஆர்ய சமா ஜ சடங் கு கள் வழியே எரி யூட் டப் பட் டது.
÷இ வ ரைப் பற் றிய விரி வான வாழ்க்கை வர லாறு வெளி வ ரு தல் இன் றி ய மை யா த தா கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


