தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உள்ளத்தை உடனே அனுப்புக!

 திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரும், மாயூரம் முன்சீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையும் நெருங்கிய நண்பர்கள். சைவரும் கிறிஸ்தவராகவும் இவர்கள் இருந்தபோதிலும், செந்தமிழால் ஒன்று

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:32 pm

 திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரும், மாயூரம் முன்சீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையும் நெருங்கிய நண்பர்கள். சைவரும் கிறிஸ்தவராகவும் இவர்கள் இருந்தபோதிலும், செந்தமிழால் ஒன்றுபட்ட மனம் உடையவர்கள்.

 ÷ஒரு சமயம் வேதநாயகம்பிள்ளை திருவாவடுதுறைக்குச் சென்று தேசிகரைச் சந்தித்து உரையாடிவிட்டு மாயூரம் திரும்பிச் சென்றார். வீட்டுக்குத் திரும்பியவுடன் தேசிகருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்.

 ÷""சூரபத்மன் வணங்குன்ற சுப்பிரமணிய சுவாமி அவர்களே! தங்களை நேரில் கண்டபின் நேற்று இரவு என் ஊருக்குத் திரும்பிவிட்டேன். நான் மட்டும்தான் வந்து சேர்ந்தேனே ஒழிய, என் உள்ளம் இன்னும் திருவாவடுதுறையிலிருந்து மாயூரம் வரவில்லை. அதனால், என் உள்ளத்தை உடனே இங்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்'' என்று பாட்டில் தமது இனிய நட்பின் இலக்கணத்தை, இலக்கிய நயத்துடன் கூடிய கடிதமாக எழுதினார். வேதநாயகம்பிள்ளை தேசிகருக்கு எழுதிய செய்யுள் கடிதம் இதுதான்!

 ""சூர்வந்து வணங்கு மேன்மைச்

 சுப்பிர மணிய தேவே!

 நேர்வந்து நின்னைக் கண்டு

 நேற்று இராத்திரியே மீண்டுஎன்

 ஊர்வந்து சேர்ந்தேன்; என்தன்

 உளம்வந்து சேரக் காணேன்;

 ஆர்வந்து சொல்லினும் கேளேன்

 அதனை இங்கு அனுப்புவாயே!''

 ÷இப்பாட்டில் எதுகை முனை முறியாத முற்றெதுகையாக வருவது கவனிக்கத்தக்கது - ரசிக்கத்தக்கது. ""ஆர் வந்து சொல்லினும் கேளேன்'' என்பதால், தாங்கள் ஒருமுறை மாயூரம் வந்து எனது இல்லத்தில் தங்கி, விருந்துண்டு இன்புற வேண்டும் என்பது மறைமுக வேண்டுகோளாக வற்புறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.