புலித்தொடர் விட்ட னைமாண் நல்லில்
சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப்பாட்டு என்ற தொகுதியில் 5-ஆவது பாடல் "முல்லைப்பாட்டு' ஆகும். காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார்


சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப்பாட்டு என்ற தொகுதியில் 5-ஆவது பாடல் "முல்லைப்பாட்டு' ஆகும். காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்ற புலவர் பாடியது.
"கார்காலத்துத் திரும்பி வருவேன்' என்று கூறிவிட்டுப் போர்மேல் சென்றிருக்கும் அரசனுக்காகக் காத்திருக்கும் அரசி, கார்காலம் வந்தும் மன்னன் வரவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் நிலையை இனிமையுடன் எடுத்துரைக்கிறது இப் பாடல். இப் பாடலில், போர்மேல் சென்றிருக்கும் தலைவன் தன் படைக்குப் பாசறை அமைக்கும் முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மன்னனின் போர்ப்பாசறையில் ஒரு பகுதியாக, மன்னனுக்குரிய இருப்பிடமே "புனை மாண் நல் இல்' எனப்படுகிறது. இதனை யவனர்கள் அமைத்துக் கொடுப்பதாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்
(3058,முல். 59-62)
என்ற அடிகளில் வரும் "புலித்தொடர் விட்ட' என்ற தொடருக்குரிய அடிநேர் உரை இதுதான்: "கசை சுற்றிய, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும், சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும், வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர், புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரித்தல் நிறைவான அழகிய நல்ல இல்லில்'
பாசறையில் மற்ற பகுதிகளையெல்லாம் மன்னனின் படைவீரர் அமைக்க, மன்னன் தங்குமிடத்தை மட்டும் யவனர் கட்டினர் என்று புலவர் கூறுகிறார். யவனர் என்போர் இன்ன நாட்டினர் என்று திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. அயோனியர் (ஐர்ய்ண்ஹய்ள்) எனப்படும் கிரேக்கராகவோ அல்லது உரோமையராகவோ (தர்ம்ஹய்ள்) இருக்கலாம். கிரேக்கர்கள் கி.மு 3-ஆம் நூற்றாண்டு அளவில் கீழைநாடுகளோடு கடல்வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும், அதன் பின்னர் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை உரோமையர் நம் நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் கூறுவர். மூன்று அடிகளில் யவனர்களைப் பற்றிய ஒரு முழுத்தோற்றத்தைப் புலவர் விவரித்துள்ளார்.
யவனர்கள் கலைத் தொழிலில் வல்லவர்கள். மிகவும் திருத்தமான முழுமை (ல்ங்ழ்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய்) கொண்ட சிலைகளை வடிப்பதில் கைதேர்ந்தவர்கள். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் அவர்கள் வடித்த ஒப்பற்ற சிலைகள் இன்றைக்கும் காக்கப்படுகின்றன. சிலைகள் மட்டுமல்ல, கட்டடக் கலையிலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்திருந்தனர். எந்தப் பொருளையும் கலை உணர்வோடு மிக நேர்த்தியாகவும் செம்மையாகவும் செய்யவதில் வல்லவர்கள்.
யவனர், ஓதிம விளக்கின் - பெரும், 316,317
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
- நெடு, 101
என்று பிற இடங்களிலும் காணலாம். குறிப்பாக, கயிறுகளால் குடில்கள் (ற்ங்ய்ற்) அமைப்பதில் அவர்கள் சூரர்கள். அவர்களைக் கொண்டு மன்னனுக்கு அழகான ஓர் குடில் அமைக்கப்படுகிறது. இதனையே புனை மாண் நல் இல் எனப் புலவர் கூறுகிறார்.
இவற்றோடுகூட புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில் என்றும் புலவர் கூறுகிறார். புலிச்சங்கிலி விடப்பட்ட என்று எல்லா உரையாசிரியர்களும் இதற்குப் பொருள் கூறியிருக்கிறார்கள். ஆனால் விளக்கங்கள் இல்லை. புலி இல்லாமல், மன்னனின் போர்ப் பாசறையில் புலிச் சங்கிலிக்கு மட்டும் என்ன வேலை? இரகுநாதன் மட்டும் தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் பட்ண்ள் ண்ள் ய்ர்ஜ்ட்ங்ழ்ங் ங்ஷ்ல்ப்ஹண்ய்ங்க் ல்ழ்ர்க்ஷஹக்ஷப்ஹ் ற்ட்ங் ஸ்ரீட்ஹண்ய் ஜ்ஹள் ம்ஹக்ங் ர்ச் ப்ண்ய்ந்ங்க் ல்ஹழ்ற்ள் ண்ய் ற்ட்ங் ப்ண்ந்ங்ய்ங்ள்ள் ர்ச் ற்ண்ஞ்ங்ழ் என்று கூறுகிறார். இதற்குரிய காரணமும் தெரியவில்லை.
புலிக்கண் கல் (ற்ண்ஞ்ங்ழ் ங்ஹ்ங் ஞ்ங்ம்) என்ற ஒரு விலையுயர்ந்த ஆபரணக்கல் உண்டு. இதைப் பற்றிய குறிப்பிலிருந்து இந்தக் கல்லால் செய்யப்பட்ட அணிகலன்களை உரோமப் போர்வீரர்கள் அணிந்திருந்தனர் என்று அறியமுடிகிறது. ஆபரணக்கல் பற்றிய களஞ்சியம் (ங்ய்ஸ்ரீஹ்ஸ்ரீப்ர்ல்ஹங்க்ண்ஹ ர்ச் ஞ்ங்ம்ள்) இதை விரித்துரைக்கிறது. எனவே, யவனர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் குடிலின் வாசலில், அவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றபடி, ஒரு புலிக்கண் சங்கிலியைத் தொங்கவிட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அது, முழுவதும் புலிக்கண் கல்லால் ஆன சங்கிலியாகவோ அல்லது ஒன்றிரண்டு புலிக்கண்கற்களைப் பதித்த தங்கச் சங்கிலியாகவோ இருந்திருக்கலாம். (படத்தில் காண்க). தொடுக்கப்படுவது தொடர் - சங்கிலி.
புலிக்கண் தொடர் என்பதனையே, புலவர் புலித்தொடர் என்று கூறியிருப்பார் எனக் கொள்ளலாம்.
புலிக்கண் புலிக்கண் கல் தொடர் - புலித்தொடர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...