சொல் வேட்டை- 39
'காலக்சி' என்பது நட்சத்திரங்கள், தூளிப்படலம், வாயு மண்டலம் போன்ற அனைத்தும் ஈர்ப்பு விசை அல்லது ஈர்ப்பாற்றலால் ஒரே பாதையில் சம நிலையாக இயங்க வைக்கப்பட்ட ஒரு மண்டலம் ஆகும்.


'காலக்சி' என்பது நட்சத்திரங்கள், தூளிப்படலம், வாயு மண்டலம் போன்ற அனைத்தும் ஈர்ப்பு விசை அல்லது ஈர்ப்பாற்றலால் ஒரே பாதையில் சம நிலையாக இயங்க வைக்கப்பட்ட ஒரு மண்டலம் ஆகும். கோடிக்கணக்கான காலக்சிக்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன என்றும், நம்முடைய சூரிய மண்டலம், மில்கி வே (ஙண்ப்ந்ஹ் ரஹஹ்) என்று சொல்லப்படும் ஒரு காலக்சியின் முனையில் இருப்பதாகவும் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "காலக்சி' என்ற சொல் கிரேக்கச் சொல்லான "காலக்சியாஸ்' என்ற சொல்லிலிருந்து "பால்வெளி' என்ற பொருளில் உருவாக்கப்பட்டதாகும். இதற்குக் காரணம், கிரேக்கப் புராண இலக்கியத்தில் ஜீயஸ் (க்ஷ்ங்ன்ள்) என்பவன் ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையாகிய ஹிராக்ளஸ் (ஏங்ழ்ஹஸ்ரீப்ங்ள்) என்னும் தேவதைப் பெண்ணிடம் அவள் உறங்கும்போது பாலருந்தச் செய்கிறான். அந்தத் தேவதைப் பெண் விழித்துக் கொண்டவுடன் அந்தக் குழந்தையைத் தள்ளி விடுகிறாள். அப்படித் தள்ளியபோது அவள் மார்பிலிருந்து வெளிப்பட்ட பால், இருள் சூழ்ந்த வான்வெளியில் உருவாக்கிய ஒளிதான் மில்கி வே ஆயிற்று என்று அப்புராணம் கூறுகிறது. ஆங்கிலத்தில் காலக்சி என்ற சொல்லும், மில்கி வே என்ற சொல்லும் 1380-இல் ஜெஃப்ரி சாசெர் (எங்ர்ச்ச்ழ்ங்ஹ் இட்ஹன்ஸ்ரீங்ழ்) எழுதிய தி ஹவுஸ் ஆஃப் ஃபேம் (பட்ங் ஏர்ன்ள்ங் ர்ச் ஊஹம்ங்) என்ற கவிதைத் தொகுப்பில்தான் முதன்முதலாகக் கையாளப்பட்டது. ஆனால், 1580-ஆம் ஆண்டிலிருந்துதான் அறிவாளிகளின் கூட்டத்தைக் குறிப்பதற்கும் காலக்சி என்ற சொல் உருவகப்படுத்தப்பட்டுப் பயனாக்கத்திற்கு வந்தது.
ஆனால், இதில் ஒரு சுவையான செய்தி என்னவென்றால், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், விண்மீன்களில் ஒன்றாக வைத்துப் போற்றப்படுவான் என்பதை, ஆங்கிலேயர்களுக்கு முன்பே, துருவ சரித்திரம் மூலமாகப் பாகவத புராணம், கூறிவிட்டது. துருவ நட்சத்திரம் என்பது இன்றும் பேசப்படுகிற ஒரு உருவகம் ஆகும். இவற்றைக் கருத்தில் கொண்டு, இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.
மு. தனகோபாலன், காலக்சி என்ற சொல்லுக்கு அண்டம், பால்வெளி என்றும், தெ. முருகசாமி, நட்சத்திர மண்டலம், கோள் மண்டல ஆய்வு என்றும், அ. கற்பூரபூபதி, ஒளிபடர் பாதை, அறிவார்ந்த சபை, அறிவார்ந்த அவை என்றும், செ. சத்தியசீலன், விண்மீன் ஒளிவட்டம், விண்மீன் திரள், பால்வீதி, விண்மீன் மண்டலம், உயர்ந்தோர் அவை, அழகிய பொருள் திரள் என்றும், இரா. நரேந்திரகுமார், ஒளிர்திரள் என்றும், வெ. ஆனந்தகிருஷ்ணன், வானிலுள்ள பால்மண்டலம், வான்கங்கை, விண்மீன் திரள், நட்சத்திரக் கூட்டம், அறிவாளிகள் கூட்டம் என்றும், சோலை.கருப்பையா, நட்சத்திர மண்டலம், வான் மண்டலம், உடு மண்டலம் என்றும், பா. ஜம்புலிங்கம், நட்சத்திர அல்லது விண்மீன் மண்டலம், நட்சத்திர அல்லது விண்மீன் குழாம் கூட்டம், சூரியக் குடும்ப விண்மீன் மண்டலம் என்றும் - இவ்வாறு பலரும் பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர்.
என். ஆர்.ஸத்யமூர்த்தி, காலக்சி என்ற சொல்லுக்கு இரு வகைப் பொருள்கள் உள்ளன என்றும், ஒன்று பால்வெளி மண்டலம், பால்வெளிப்பாதை, விண்மீன் திரள், பிரபஞ்சக்கூறு, பெரும்பேரண்டக்கூறு; இரண்டாவது மீக்குயர் குழாம், உயர்சீர் குழாம், சீர்மேல் குழாம்; பொருள்களைக் குறிக்கும்போது மீக்குயர் திரள், உயர்சீர் திரள், சீர்மேல் திரள் என்றும் கூறியுள்ளார்.
வழக்குரைஞர் கோ. மன்றவாணன், பால்வீதி, பால்வெளி ஆகிய சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எனவே, உடுக்கூட்டம், உடுத்திரள், உடுக்குடும்பம், விண்மீன் கூட்டம், விண்மீன் குடும்பம், விண்மீன் மண்டலம், விண்மீன் தொகுதி, உயர்ந்தோர் குழாம், அறிஞர் குழாம், தக்கோர் குழாம், தகைசான்றோர் குழாம், மேலோர் குழாம், சிறந்தோர் குழாம், சீர்பொருள் நிரல் அல்லது சீர்பொருள் திரள் ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார். "நட்சத்திரக் கூட்டம்' என்ற சொல் தமிழல்ல என்றால், தேவையான இடங்களில் முன்சொல் அல்லது பின்சொல் இட்டு ஒளிமீன் கூட்டம் அல்லது உடுக்கூட்டம் என்ற சொற்களைச் சற்று முயன்று பயன்படுத்திப் பார்க்கலாம் என்கிறார்.
அ. மான்விழி, பால்வீதி, பால்வழிப்பாதை, பால்வெளி அண்டம், திறன்சார் கூட்டம், அறிவாளர் கூட்டுச்சபை, ஓரியல்புத் தொகுப்பு, ஓரியல்புக் கூட்டம், கருத்தொருமித்தோர் குழு, ஒத்த அறிஞர் குழு போன்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம், இச்சொல்லுக்கு வானிலுள்ள பால்மண்டலம், வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம் என்னும் பொருள்களைத் தருகிறது.
காலக்சி என்ற சொல் தோன்றிய விதத்தையும், காலப்போக்கில் அது உருவகச் சொல்லாகப் பயனாக்கம் பெற்றதையும் கருத்தில் கொண்டு பார்த்தால், இச்சொல்லுக்கு நாம் கொள்ளும் இணைச்சொல், இவ்விரு பயன்பாட்டையும் உள்ளடக்கியதாக இருப்பதே சாலப்பொருந்தும். அவ்வகையில், நட்சத்திர மண்டலம் அல்லது நட்சத்திரக் கூட்டம் என்ற சொல் சரியாக இருக்கும். ஆனால், நட்சத்திரம் என்ற சொல் வடமொழிச் சொல். எனவே, விண்ணொளித் திரள் என்ற சொல் காலக்சி என்ற சொல்லுக்கு இருவகைப் பொருள்களையும் உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. எனவே, "காலக்சி' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "விண்ணொளித் திரள்' ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...