பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பத்து... பத்து...

முதுமொழிக் காஞ்சி ஏழாவது பத்து - பொய்ப் பத்து

Updated On :9 ஜூன் 2013, 1:09 am IST

முதுமொழிக் காஞ்சி ஏழாவது பத்து - பொய்ப் பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் பேரறிவினோன் இனிது வாழாமை பொய்.

கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்கள் யாவருள்ளும் பேரறிவுடையவன் இன்பமாய் வாழான் என்பது பொய்.

2. பெருஞ்சீரோன் தன் வெகுளியின் மைபொய்.

பெருஞ் செல்வம் உடையவன் கோபம் கொள்ளாமல் இருத்தல் அரிதாகும். அதாவது, மிகுந்த செல்வம் உடையவன் சினம் கொள்ளமாட்டான் என்று கூறுவது பொய்.

3. கள்ளுண் போன்சோர் வின்மை பொய்.

மது அருந்துபவன் அறிவு ஒழுக்கத்தில் தவறாமல் இருப்பான் என்பது பொய்.

4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.

செயல் செய்வதற்குரிய காலத்தை அறிந்து முயற்சி செய்யாதவன் செயலானது முடிவுறும் என்பது பொய்.

5. மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்.

பிற்காலத்தில் தனக்கு வரக்கூடியதை முன்பே அறிந்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளாதவன் தன்னைத்தான் காத்துக் கொள்வான் என்பது பொய்.

6. உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.

தகுந்த செயலைச் செய்யாமல் வெறுத்துச் சோம்பலாய் இருப்பவன் உயர்வைத் தேடுவான் என்பது பொய்.

7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.

சிறிய அடக்கத்தைப் பெறாதவன் பெருமையை விரும்பான் என்பது பொய்.

8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.

மற்றவர்க்கு அரியனவாய் உள்ள பெருமைச் செருக்கைப் பெறாதவன் கீழ்மையை விரும்பு

வான் என்பது பொய்.

9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.

பொருள் விருப்பத்தால் உண்டாகும் பற்றுள்ளத்தை உடையவன் அறநெறிப்படி முறை செய்வான் என்பது பொய்.

10. வாலியன் இல்லாதோன் தவம் செய்தல் பொய்.

மனத்தில் தூயவனாக இல்லாதவன் தவம் செய்வான் என்பது பொய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.