புகழேந்திப் புலவர், பாண்டிய மன்னனின் அரவணைப்புக்கு உரியவராய் இருந்தவர். இவருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் புலமைக் காய்ச்சல் இருந்தது என்றும், இவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் விநோதரச மஞ்சரி கூறும். இவர் தமிழகத்தைத் தாண்டி, அயல்நாடு சென்று வந்ததாகச் செய்தி இல்லை.
திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், அந்தகக்கவி வீரராகவ முதலியார், குமார தேவர் முதலியோர் இலங்கைக்குச் சென்று வந்தனர் என்று சொல்லப்படுகிறது. புகழேந்திப் புலவரும் இலங்கைக்குச் சென்றிருக்கிறார், அங்கு ஆட்சி புரிந்த சிங்கை ஆரிய சக்கரவர்த்தியைப் போற்றினார் என்ற புதுத் தகவலைத் தமிழ் நாவலர் சரிதை என்ற நூல் கூறுகிறது. அந்த அரசனிடம் யானையும் பொன்னும் பெற்றார் என்றும் அறிவிக்கிறது.
புகழேந்திப் புலவர் போற்றிய இந்த அரசன் 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி செய்தான் என்று தெரிகிறது. இவனிடம் யானைப் பரிசைப் பெற்ற புலவர் புகழேந்தி, பாண்டிய மன்னனிடம் அதைத் தெரிவித்தார். அப்போது அவர் பாடிய பாடல் இது:
""பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்கும்
காவலர் நிற்கும்படி வைத்த வாகண்டி யொன்பதினும்
மேவலர் மார்பினுந் திண்டோளினுஞ் செம்பொன் மேருவினுஞ்
சேவெழுதும் பெருமாள் சிங்கையாரிய சேகரனே'' (148)
புகழேந்திப் புலவரால் போற்றப்பட்ட அரசன் ஆரியசேகரன் இறந்தான். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார் புகழேந்திப் புலவர். மனம் நொந்து பின்வரும் பாடலைப் பாடினார்.
அஆ விதியோ வடலா ரியர் கோமான்
எஏ வலரா விழிந்தநாள் - ஒஓ
தருக் கண் ணிலுங்குளிர்ந்த தண்ணளி தந்தாண்ட
திருக்கண்ணிலுஞ் சூடுமோ தீ'' (144)
புகழேந்திப் புலவர் உலகப் புகழ்பெற்ற கதிர்காமமும் சென்றார். அங்கு முருகனுடைய மயில் பற்றியிருந்த பாம்பை விட்டு விடுமாறு சொல்லி முருகனை வேண்டினார். அப்போது அவர் பாடிய பாடல் இது.
""தாயரவை முன்வருத்துஞ் சந்த்ரோதயம் தனக்குன்
வாயரவை விட்டுவிட மாட்டாயோ - தீயரவைச்
சீனு மயிற் பெருமாள் தென்கதிர்காமப் பெருமாள்
ஏறு மயிற் பெருமாளே'' (145)
அவர், அங்கிருந்த ஓடக்காரனையும் பாடியுள்ளார். (பா.146). புகழேந்திப் புலவர் பற்றிய இந்தச் செய்திகள் சிந்தனைக்கு உரியவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

