காற்றுள்ளபொழுதே தூற்றிக்கொள்!

தொல் தமிழரின் நிலம் சார்ந்த வாழ்வியல் என்பது இயல், இசை, நாடகத்தோடு அதாவது ஆட்டம் பாட்டத்தோடு இயைந்த ஒன்று. அந்நில மக்களின் வாழ்வியலின் ஒரு சிறு நிகழ்வை வெள்ளிவீதியார் எனும் பெண்பாற் புலவர் தம்
காற்றுள்ளபொழுதே தூற்றிக்கொள்!

தொல் தமிழரின் நிலம் சார்ந்த வாழ்வியல் என்பது இயல், இசை, நாடகத்தோடு அதாவது ஆட்டம் பாட்டத்தோடு இயைந்த ஒன்று. அந்நில மக்களின் வாழ்வியலின் ஒரு சிறு நிகழ்வை வெள்வீதியார் எனும் பெண்பாற் புலவர் தம் பாடலில் பதிவு செய்திருக்கிறார்.

"வாடல் உழிஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன வொலிப்ப'
(அகம்.45)

பாலைத்திணைப் பாடலான இதில் வேனில் காலத்தில் உழிஞ்சில் நெற்கதிர்களை அடித்துத் தூற்றி அதன் மணிகளைப் பிரிக்கும் வேலையின் நுட்பத்தைப் பதிவு செய்துள்ளார். வறண்ட காலத்தில் விளைகின்ற தானிய வகைகளில் ஒன்று உழிஞ்சிலாக இருக்கலாம். அது வரகு, திணை, கேழ்வரகு போன்றதோர் உணவு வகை.

அப்படி அதன் நெற்கதிர்களைத் தூற்றும்பொழுது காற்று வீச வேண்டும். அப்பொழுதுதான் அதன் மணிகளின் தரம் பிரியும் (முற்ற விளைந்தது, பாதி தானியத்தை உடையது, பதர்). வேனிற்காலத்தில் காற்று தொடர்ந்து வீசாது. அதே சமயம் விட்டு விட்டு வீசும். அப்படியான காற்றைத் தன்வசப்படுத்த பறையை ஒலிக்கின்றனர். 

அவ்வொலி விட்டு விட்டு ஒலிக்கிறது என்கிறார் வெள்ளிவீதியார்.

இன்றும்கூட, குறு விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் விளைந்த கதிர்களைக் களத்தில் கொண்டுவந்து சேர்ந்து அடித்து, தூற்றி நெல் மணிகளைப் பிரிக்கின்றனர். வேனிற்கால வெயில், வைக்கோலின் சுணை இவற்றுக்கு இடையில் அடித்த நெல்லைத் தூற்ற வேண்டும். அப்படித் தூற்றுகிறவர்கள்  காற்று வரவில்லை என்றால் தன் வாயால் ஒலி ("விசில்' சத்தம்) வரச்செய்வர். தானே எழுப்புகின்ற அந்த விசில் சத்தம் தொடர்ந்து வராது விட்டு விட்டே வரும். அதனுடன் காற்றும் வரும். அப்படியே தூற்றியும் கொள்வர்.

இந்நிகழ்ச்சியைத்தான் வெள்ளிவீதியார் பதிவு செய்கிறார். ஆனால், தொல்தமிழர் அதற்கென்று பறையைப் பயன்படுத்தியிருக்கின்றனர். காற்றைக்கூட இயக்க வைத்தவன் தமிழன். அதை உடனிருந்து அனுபவித்துப் பதிவு செய்தவள் தமிழச்சி. "காற்றுள்ளபொழுதே தூற்றிக்கொள்' எனும் பழமொழியைக்கூட பொய்யாக்கியவன் தொல்தமிழன் என்பது வியப்பானது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com