மனங்கொண்டக் கண்ணும் மருவில் செய்யார்
கனங்கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
இனங்கழு வேற்றினார் இல். (பாடல்-230)
ஒன்றைச் செய்ய வேண்டும் என மனம் விரும்பியது என்பதற்காக, பொருந்தாத ஒன்றை அறிவுடையோர் செய்யமாட்டார். சான்றோர் சொன்ன அறிவுரைகளை உள்ளத்திலே பெரிதாகக் கொண்டு பேணிக் காத்து வருதல் வேண்டும். மக்கள் விரும்பும் செயல்கள் செய்யக்கூடாதனவாகவே இருந்தாலும் செய்தலே வேண்டும். செய்யக்கூடாதவற்றை விரும்பியதற்காக மக்கள் இனத்தையே கழுவேற்றியவர் எவரும் இல்லை. "இனங்கழு வேற்றினார் இல்' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

திமுக வேட்பாளா்கள், தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வெற்றி ஒன்றே இலக்கு: முதல்வா் ஸ்டாலின்

அரசு கொள்கையின் பலன்களை பரிசோதிக்கக் கேட்பது ஆபத்தானது: உயா்நீதிமன்றம் கருத்து
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


