பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
மலைமேல் இருக்கும் இனிய தேனைத் தட்டிவிட்டு ஆண் குரங்கு நக்கி மகிழும், அத்தகு மலையைச் சேர்ந்தவனே! தெருவில் செல்லும் பசு ஒருவரை முட்டிவிட்டால் பதிலுக்கு அவர் பசுவை முட்டுவதில்லை.


ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?- தீ ம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட- தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல் (பாடல்-268)
(தெ-ரை) மலைமேல் இருக்கும் இனிய தேனைத் தட்டிவிட்டு ஆண் குரங்கு நக்கி மகிழும், அத்தகு மலையைச் சேர்ந்தவனே! தெருவில் செல்லும் பசு ஒருவரை முட்டிவிட்டால் பதிலுக்கு அவர் பசுவை முட்டுவதில்லை. அதுபோல, அறிவற்ற சிறியோர் பரப்பும் பொய்யுரைக்குக் கற்றறிந்த சான்றோர் மனம் வருந்திச் சினம் கொண்டு பேசுவரோ? பேசார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...