மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உள்ளத்திலே தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெரியவர்களாக ஆக்கி, தனக்குத் தொலைவான இடத்திலே விட்டிருந்தால், அவர்கள் உறுதியாக இவனுக்கு உதவியான ஒரு செயலையுமே செய்யமாட்டார்கள்.

News image
Updated On :17 ஜூலை 2022, 11:20 am

தினமணி


அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால்-இகந்து
நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் ஆமை
நனைந்துவா என்று விடல். (பாடல்-263)

உள்ளத்திலே தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெரியவர்களாக ஆக்கி, தனக்குத் தொலைவான இடத்திலே விட்டிருந்தால், அவர்கள் உறுதியாக இவனுக்கு உதவியான ஒரு செயலையுமே செய்யமாட்டார்கள். அப்படி விடுவது, ஆமையைப் பிடித்த ஒருவன், அதனை "நீண்ட குளத்தினுள்ளே போய்க் குளித்து விட்டு வா' என்று அதன் தன்மை அறியாமல் போகவிட்ட செயலொடு ஒக்கும். "நீள் கயத்துள் ஆமை நனைந்து வா என்று விடல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.