பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
எங்கும் நிறைந்து குன்றிடம் எங்கணும் பாய்ந்து ஓடி வருகின்ற குளிர்ந்த வெள்ளத்தினது பெருமை எல்லாம், மலையினிடத்தே பெய்த மழையின் சிறப்பினைக் காட்டும் அந்த அளவினதேயாகும்.


கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவைகாட்டும்-மல்கி
தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம்
மலைப்பெயல் காட்டுந் துணை. (பாடல்-264)
எங்கும் நிறைந்து குன்றிடம் எங்கணும் பாய்ந்து ஓடி வருகின்ற குளிர்ந்த வெள்ளத்தினது பெருமை எல்லாம், மலையினிடத்தே பெய்த மழையின் சிறப்பினைக் காட்டும் அந்த அளவினதேயாகும்.
அதுபோலவே பகைவரைக் கொன்று அழிக்கும் சினமுடைய வேந்தனது கல்வியின் பரப்பும், அவன் கட்டுரைத்துப் பேசுகின்ற சிறந்த பேச்சு முறைமையும் எல்லாம் அவனுக்கு அமைந்திருக்கும் அறங்கூறும் அவையின் சிறப்பினையே விளங்கக் காட்டுவதாகும். "நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...