உலகில் வாழும் உயிரினங்களின் பிறப்பு பெண்ணினத்தின் வாயிலாக நிகழ்கின்றது. படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் உன்னதமான பிறவியாகப் பெண்ணினம் போற்றப்படுகின்றது. இல்லறத்தில் வாழ்பவர்க்கு இல்லாள் இன்றி எதுவும் சிறக்காது என்பதை இலக்கியங்கள் பேசுகின்றன.
மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை
தான்செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை
தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு
(நான்மணிக்கடிகை)
ஒரு வீட்டிற்குப் பாழாவது மனைவி இல்லாமை; தான் செல்லும் திசைகளில் உள்ள ஊர்களுக்குப் பாழாவது அங்கு நண்பர் இல்லாமை; பலரும் கூடியிருக்கும் அவைக்குப் பாழாவது கல்வி, கேள்வி சான்ற பெரியோர் இல்லாமை; தனக்குப் பாழாவது கல்வியறிவில்லாத உடம்பு உள்ளமை.
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை
ஈன்றாளோ
டெண்ணக் கடவுளுமில்
(நான்மணிக்கடிகை)
ஒருவனுக்குக் கண்ணைப் போல் சிறந்த உறுப்பு வேறு ஒன்று இல்லை; கணவனைப் போன்ற நெருங்கிய உறவினர் ஒரு பெண்ணுக்கு வேறு ஒருவர் இலர்; தம் பிள்ளைகளைப் போல் ஒளியுடையவாய்ப் பொருந்திய பொருள் வேறு பொருள் இல்லை எனக் கூறும் இப்பாடலில் பெண்களுக்கு கணவன், பிள்ளைகள் முக்கியமானவர்கள் எனக் கூறப்பட்டுள்ள போதிலும் தாயை விடச் சிறந்த கடவுள் எதுவுமில்லை என்று போற்றியுள்ளமை உணரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


