டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ராம ராம கோஷம்!

மாமுனிவர் அகத்தியர் திருப்பாதங்கள் பதியப் பெற்றதால் புனிதம் பெற்ற பொதிகை மலை. இங்கிருந்து புறப்படும் தென்றல் விளையாடும் இடங்களில் எண்ணற்ற சிறப்புமிகு சிவத் திருத்தலங்கள், வைணவத் திருத்தலங்கள் உள்ளன. அ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:05 pm IST

மாமுனிவர் அகத்தியர் திருப்பாதங்கள் பதியப் பெற்றதால் புனிதம் பெற்ற பொதிகை மலை. இங்கிருந்து புறப்படும் தென்றல் விளையாடும் இடங்களில் எண்ணற்ற சிறப்புமிகு சிவத் திருத்தலங்கள், வைணவத் திருத்தலங்கள் உள்ளன. அத்தகைய சீர்மிகு வைணவத் தலங்களுள் ஒன்றான "அருள்மிகு ராமசாமி திருக்கோயில்' அமையப் பெற்ற இடம் சாம்பவர் வடகரை ஆகும். இவ்விடம் குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. தென்காசியிலிருந்து ஆய்குடி வழியாக திருநெல்வேலி செல்லும் வழியில் இதனை அடையலாம்.

இக்கோயிலில் மாதம்தோறும் கடைசி வெள்ளியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்; அன்று சீதா தேவி சமேத ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, மற்றும் லட்சுமணப் பெருமாள் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வருவர்.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மிகப் பெரிய அளவிலான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுற்று வட்டார மக்கள் அனைவரும் அன்றைய தினத்தில் தேரோட்டத்தில் கலந்து கொண்டு, "ஸ்ரீ ராம ஜெயம்' என்ற நாமத்தை உச்சரிப்பர். அப்பொழுது எங்கும் ""ராம... ராம...'' என்ற ஒலி திகழ்வது எல்லையில்லா ஆனந்தத்தைத் தரக்கூடியது ஆகும்.

உடல் நோயை விட மன நோய் உள்ளவர்கள் மனத் தெளிவு வேண்டி, "ஸ்ரீ ராமஜெயம்' நாமம் உச்சரித்துப் பலன் பெற இங்கு வந்து செல்வது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

அனுமனுக்கு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தச் சிறப்பு மிக்க கோயிலை நிர்வகித்து வருபவர்கள் சாம்பவர் வடகரை இந்து நாடார் சமுதாய மக்கள் ஆவர்.

இக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 11 நாட்கள் திருநாட்களாகக் கொண்டாடப்படுகிறது. விசாகத்திற்கு முந்தைய பத்தாம் நாளில் (27.5.09) திருக்கோயில் கொடியேற்றம் மிகப் பெரும் அன்னதானத்துடன் தொடங்கியது. ஏழாம் திருநாளன்று (2.6.09) முக்கியச் சிறப்பு நிகழ்ச்சியாக "சீதா கல்யாணம்' நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது.

இக்கோயிலில் உள்ள திருத்தேர் மிகப் பழமையானதோடு, கலையம்சமும் நிறைந்தது. ஸ்ரீராமர் வரலாறு கூறும் மரச் சிற்பங்கள் நிறைந்தது. விசாக தினத்தன்று ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி இத்திருத்தேரினிலே பவனி வரும் தேரோட்டம் 5.6.09 அன்று, மிகச் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற்று மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.