வெற்றி தரும் விநாயகர்!
தமிழ்நாட்டின் தனிப்பெரும் சிறப்பு எங்கு பார்த்தாலும் விநாயகர் கோயில் இருப்பதுதான்.


தமிழ்நாட்டின் தனிப்பெரும் சிறப்பு எங்கு பார்த்தாலும் விநாயகர் கோயில் இருப்பதுதான். அவ்வகையில் சென்னை, வேளச்சேரியில், விஜயநகர் ஐந்தாவது மெயின் ரோட்டில் உள்ளது ஸ்ரீவிஜயவிநாயகர் திருக்கோயில். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவான கோயில் இது. மழைக்காலங்களில் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருணங்களில் மக்களை நொய்நொடிகளிலிருந்து காத்தருளியவர் இந்த விநாயகர். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை விஜயநகர் விநாயகரிடம் சொல்லி வணங்கினால் வெற்றி நிச்சயம்.
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்த ஆலயத்தில் சதுர்த்தி உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆரம்பத்தில் விநாயகர் சந்நிதியும்,கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கையம்மன் சந்நிதிகளும் அமைந்திருந்தன. தற்போது இந்த ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக ஐயப்பன், பாலமுருகன், ஆஞ்சநேயர், நவகிரக சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்து தற்போது மண்டலாபிஷேகம் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இன்னும் திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
தகவலுக்கு 93821 11008.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...