தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வெற்றி தரும் கொற்றவை!

பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், ஓர் அம்மனின் கோயிலை முதன்மையாக வைத்து தங்களது போர்ப் பயிற்சிப் படை வீட்டை அமைத்தனர். அந்த அம்மனே படை வீட்டம்மன் என்ற பெயரில் அருள்புகிறாள். பண்ருட்டியில், வைத்திரெட்ட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:30 pm

பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், ஓர் அம்மனின் கோயிலை முதன்மையாக வைத்து தங்களது போர்ப் பயிற்சிப் படை வீட்டை அமைத்தனர். அந்த அம்மனே படை வீட்டம்மன் என்ற பெயரில் அருள்புகிறாள். பண்ருட்டியில், வைத்திரெட்டிப் பாளையம் பகுதியில் உள்ள கோயிலில் வீற்றிருக்கிறாள் படை வீட்டம்மன். தன்னை வழிபடுவோருக்கு வெற்றியைத் தரும் கொற்றவையாக விளங்குகிறாள். இவளை வழிபட திருமணத் தடை நீங்கும். கொடிய நோய்களும் அகலும். நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு இக்கோயிலில் தங்கி அம்மனை வழிபடுகின்றனர். குறைகள் நீங்கிய பின் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

இக்கோயிலில் செடில் உற்ஸவமும், தேர்த் திருவிழாவும் மிகவும் புகழ் பெற்றவை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இக்கோயிலுக்குரிய தேர் பழுதடைந்து திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது ஆகமக்கலை விதிமுறைகளின்படி தேர்த் திருப்பணி நடைபெறுகிறது. விரைவில் திருப்பணி முடிந்து படைவீட்டம்மன் தேரில் பவனி வர வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம். மேலும் தகவலுக்கு 99657 22777.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.