இறையச்சமே வழி
பல்க்" நாட்டில் அரசவை தர்பார் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரசவைக்குள் ஒருவர் நுழைந்து எதையோ தேடினார். காவலாளிகள் அவரை அரசர் முன் நிறுத்தினர். ""நீர் யார்? இங்கே என்ன தேடுகிறீர்?'' என்று பேரரசர்


பல்க்" நாட்டில் அரசவை தர்பார் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரசவைக்குள் ஒருவர் நுழைந்து எதையோ தேடினார். காவலாளிகள் அவரை அரசர் முன் நிறுத்தினர். ""நீர் யார்? இங்கே என்ன தேடுகிறீர்?'' என்று பேரரசர் இப்ராஹிம் இப்னு அத்ஹம் கேட்டார்.
""இந்த சத்திரத்தில் தங்கலாம் என்று வந்தேன்''
""என்ன! இது சத்திரமா? இது என் அரண்மனை. உமக்குத் தெரியாதா?'' என்று கோபமாகக் கேட்டார் அரசர்.
""அப்படியா! உமக்கு முன் இங்கு யார் தங்கி வந்தார்?''
""எனது தந்தை''
""அதற்கு முன்?''
""எனது தாத்தா"'
""உமது தாத்தாவிற்கு முன்''
""எனது மூதாதையர், இந்த அரண்மனையில் தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்''
""அப்படியென்றால் இது சத்திரமேதான்'' எனக்கூறி சென்றுவிட்டார்.
மேற்கண்ட உரையாடலால் அரசர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அரசவை கலைந்தது. ஆனால் அரசரின் சிந்தனை மயக்கம் மட்டும் கலையவில்லை.
""உலக இச்சையே எல்லா துன்பங்களுக்கும் வேராகும். உலக ஆசை அதிகரித்தவனின் எண்ணங்கள் செல்லும் திசை "செல்வம்' இருக்கும் பக்கமேயாகும்'' என்கிற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல்லைப் படித்த அரசரின் மனம் இறை தியானத்தில் மூழ்கியது.
ஒருநாள் அரண்மனைப் பணிப்பெண் அரசரின் மஞ்சத்தை விரித்து மலர் தூவினாள். அவளுக்கு மலர் மஞ்சத்தில் படுத்துறங்க வேண்டுமென்ற ஒரு நப்பாசை வெகுநாள்களாக இருந்து வந்ததால், அன்று அவள் அரசரின் மஞ்சத்தில் படுத்துறங்கி விட்டாள்.
அரசர் தம் பணி முடித்து படுத்துறங்க மஞ்சம் வந்தார். அங்கு அவர் கண்ட காட்சியானது அவரை நிலைகுலையச் செய்துவிட்டது.
""நாம் படுத்துறங்கும் மஞ்சத்தின் மீது பணிப்பெண் படுத்துறங்குவதா?'' என்கிற கடும் சினம் எழுந்தது.
பணியாளை அழைத்து அப்பெண்ணுக்கு சவுக்கடி கொடுக்கும்படி பணித்தார்.
உடனே பணிப்பெண் கண்ணீருடன், ""அரசர் பெருமானே! இம்மலர் மஞ்சத்தில் சிறிது நேரம் படுத்துறங்கிய எனக்கு சவுக்கடி என்றால், காலமெல்லாம் இதில் படுத்துறங்கும் தங்களுக்கு இறைவன் என்ன தண்டனை அளிப்பானோ? என்பதை எண்ணி நான் அஞ்சுகின்றேன்'' எனக் கூறினாள்.
பணிப்பெண்ணின் கூற்றைக் கேட்டதும் அரசருக்கு மேலும் அச்சம் அதிகரித்தது. அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி தவித்தார். அவர் இறை சிந்தனையில் மூழ்கி இறை வேதமாகிய "அல்குர் ஆனையும்', நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயலான "அல்ஹதீûஸயும்' படித்துக் கொண்டிருந்தார். இறைவனை நினைத்து சிந்தித்த வண்ணமிருந்தார். மேலும், பணிப்பெண் கூறிய சொற்கள் ஈட்டியால் குத்தியதுபோல் அரசரின் நெஞ்சில் தாக்கியது. மேலும், அவரது இதயத்தை இறையச்சமும் வாட்டி எடுத்தது.
""மனிதர்கள் இறையச்சம் மிக்கவர்களாக வாழ்கின்றபோது, இம்மையிலும், மறுமையிலும் இறைப் பாதுகாப்பைப் பெறுகின்றார்கள். மேலும், அவர்கள் எண்ணிப் பாராத அளவில் உணவையும் வழங்குகின்றான்''(அல்குர்ஆன்: 65:2,3).
""எண்ணங்களின் அடிப்படையில்தான் உங்களது செயல்கள் அமைகின்றன'' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்:புகாரி).
ஒருநாள் ஒரு முதியவரின் சொற்பொழிவில்,""இவ்வுலக வாழ்க்கையும், மறுவுலக வாழ்க்கையும் ஒன்று சேராது. ஆகையால், ஒன்றை நீங்கள் விரும்பினால் மற்றொன்றைத் துறக்க நேரிடும். இதுவே இன்பத்தின் வழி'' என்பதைக் கேட்ட அரசரின் மனம் மாறி, ஒரு நிலையான முடிவுக்கு வந்துவிட்டார். அரச வாழ்வைத் துறந்து மறுவுலக வாழ்க்கையில் வெற்றி பெற இறை பாதையை நாடிச் சென்றார். பின்னாளில் பேரரசர் இறை நேசச் செல்வர்களில் ஒருவராக திகழ்ந்து மக்களுக்கு நேர் வழியைக் காட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...