

இன்று அதிகம் தேடப்படுவது அமைதி என்பதை நாம் அறிவோம்.
போரினால் சிதைந்து கொண்டிருக்கும் சூழலில் அமைதி என்பது போரற்ற நிலையாகக் கருதப்படுகிறது. இதில் முரண்பாடு என்னவென்றால் அமைதியை போர் கொண்டு நிலைநாட்டப்போவதாக நினைத்து, போர்த்தளவாடங்களை வாங்கிக் குவிப்பதற்காக கோடிக் கோடியாக பணத்தைக் கொட்டுவதுதான். இரண்டாம் உலக யுத்தம் தொடுக்கப்பட்டதற்கு காரணம் யுத்தம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக என்பது சொல்லப்படாத ஓர் உண்மை. ஆனால் இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின் இதுவரை சுமார் 150 போர்கள் உலகமெங்கும் நடந்தேறி இருக்கின்றன.
ஒரு நாட்டின் எல்லையில் போரில்லை என்றால் அந்த நாடு அமைதியாக இருக்கிறது என்று சொல்லும் நிலை இன்று இல்லை. இன்று எல்லை தாண்டி எதிரிகளை எதிர்கொண்டு போரிடுவதைவிட, உள் நாட்டுக்குள்ளாக தீவிரவாத வன்முறை சம்பவங்களைச் சமாளிக்கவேண்டிய நிலை வந்துவிட்டது. இதற்கெல்லாம் ஒரு காரணம் சமாதானமும் அமைதியும் எங்கிருந்தோ வருவதாக நாம் யூகித்துக்கொள்வதாகும். அமைதியின்மையின் வேர்கள் நம்மைத் தவிர வேறிடத்திலோ, வேறொருவரிடமோ இருப்பதாக நினைத்து அவற்றைச் சரி செய்ய முயற்சிப்பதாலேயே நாம் எல்லோரும் தேடும் அமைதி இன்னும் நமக்கு கிட்டாமல் தூரமாகிக்கொண்டே போகிறது.
அன்னை தெரசாவின் கணிப்பில், உலகத்தில் காணப்படும் அமைதிக் குறைவு குடும்பங்களில் வேர் கொண்டிருக்கின்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய தரமான நேரத்தைக் கொடுப்பதில்லை. பிள்ளைகளும் தங்கள் பெற்றோரிடமிருந்து அஞ்சி வெறுத்து ஒதுங்குகிறார்கள்.
வன்முறையிலும் தீவிரவாதத்திலும் சமூகக் குற்றங்களிலும் ஈடுபட்ட இளைஞர்களை விசாரித்ததில் கிடைத்த ஒரு முக்கிய தகவல், அவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோராலோ, சிறப்பான நபர்களாலோ வஞ்சிக்கப்பட்டு அடிப்படையான பாசம் தரப்படாமல் விடப்பட்டவர்கள் என்பதாகும். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அநீதிக்கு ஆளாகியவர்கள்.
இயேசு பிரானின் சீடர்களில் ஒருவர் யாக்கோபு. அவர் ""சண்டை சச்சரவுகளின் காரணம் நம்முள் இருக்கிறது'' என்கிறார்:
"உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் சண்டை, சச்சரவுகளை உண்டாக்குகிறீர்கள். (யாக் 4:1,2)''.
நாமும் நமது உலகமும் நாடித் தேடும் உண்மையான அமைதி நமது அகத்தில் உள்ள அகங்காரத்தையும் காமத்தையும் இச்சையையும் அடக்கி வாழ்வதினால் மட்டுமே கிடைக்கும். இயேசுபிரான் ""அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுவர்'' என்கிறார்.
இத்தகைய அமைதியை நம்முள் கண்டு, பிறரிடத்தில் விதைத்து, கடவுளின் மக்கள் ஆவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |

ஒவ்வொரு முறையும் அமித் ஷா சென்னைக்கு வர முடியுமா? டிடிவி தினகரன் கேள்வி
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்

காங்கிரஸும், ராகுல் காந்தியும் பாஜகவின் 'பி-டீம்' - கேரள முதல்வர்
வீடியோக்கள்

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

