பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சொர்க்கத்தின் திறவுகோல்!

ரம்ஜான் பெருநாள் மற்றும் ஈத்துப் பெருநாள் என்று சொல்லப்படுகின்ற இஸ்லாமியர்களின் மகிழ்ச்சிகரமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2013, 4:05 pm IST

ரம்ஜான் பெருநாள் மற்றும் ஈத்துப் பெருநாள் என்று சொல்லப்படுகின்ற இஸ்லாமியர்களின் மகிழ்ச்சிகரமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள், ரமலானில் ஒரு முழு மாதம் பகல் எல்லாம் நோன்பு இருந்து இரவில் கண் விழித்து அதிகமாக அல்லாஹ்வை நினைத்து வணக்கங்கள், இபாதத்துகள் செய்ததன் பலனாக ஈமான் கொண்ட மக்களுக்குக் கிடைத்த ஒரு மகத்தான வெகுமதியாகும். இது அல்லாஹ்வின் அருட்கொடை.

திருக்குர்ஆன் அத் 2. வசன எண்கள் 183,184 மற்றும் 185ல் ரமலான் நோன்பைப் பற்றி அல்லாஹ் விளக்கிக் கூறியுள்ளான். இந்நோன்பின் நோக்கம் இறைவனின் கட்டளையை முழுமையாகக் கடைப்பிடித்தல் ஆகும். மேலும் உண்ண உணவில்லாத வறியோர்களின் மனநிலையை இந்த நோன்பு நம்மை உணர வைக்கின்றது. இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாகிய நோன்பை பரிபூர்ணமாக நிறைவு செய்த பின் நான்காம் கடமையாகிய ஏழை வரி என்ற "ஜகாத்' முழுமையாக நிறைவேற்றுவதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

குர்ஆனில் அல்லாஹ் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஜகாத் கொடுப்பதைப் பற்றி அருளியுள்ளான். அத் 2. வசன எண் 83ல் ""உறவினர்களுக்கும், அநாதையான ஏழை, எளியவர்களுக்கும் உங்கள் செல்வங்களில் ஒரு சிறு பகுதியை அதாவது இரண்டரை சதவிகிதம் என்று கணக்கிட்டு அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு ஈத் பெருநாள் முன்பே கொடுத்திடுங்கள்'' என்று கூறியுள்ளான். இதனால் அம்மக்களும் அந்த ஜகாத்தைப் பெற்று ஈத்துப் பெருநாளில் செல்வந்தர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல, அவர்களும் ஏழைகளும் சந்தோஷமாக இருப்பார்கள்.

ஜகாத் கொடுப்பதால் அதைக் கொடுத்தவருக்கு மறுமை நாளில் அல்லாஹ் நன்மைகளை வழங்குகிறான் என்று அத்.2 வசன எண் 110ல் அல்லாஹ் விளக்கியுள்ளான். பிறிதொரு இடத்தில் ""செல்வம் என்பது செல்வந்தர்களுக்குள்ளேயே பயன்பட்டுக் கொண்டிருக்காமல் அதன் ஒரு பகுதியை ஏழைகளுக்கும் பங்கிட்டுக் கொடுங்கள்'' என்று கட்டளையிட்டுள்ளான்.

செல்வம் என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் சென்றடைகின்றது என்ற தத்துவத்தை இந்த ஜகாத் என்ற ஏழை வரி நிருபணம் செய்கின்றது. தான தர்மம் செய்வதால் நம்மிடம் மீதமுள்ள செல்வம் மற்றும் பொருட்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றது என்ற உயரிய கருத்தும் உள்ளது. அதனால் ஒருவரது வாழ்க்கையில் "பரக்கத்' என்ற அபிவிருத்தியும் இறையருளால் நிச்சயமாக ஏற்படுகின்றது என்று குர்ஆனும் நபிகளாரின் ஹதீஸ்களும் வலியுறுத்திக் கூறியுள்ளன. இந்த அறிவுரை மற்றும் விளக்கங்களும் மனிதன் புனிதம் பெற வேண்டும் என்ற நோக்கமேயாகும்.

ஜகாத் கொடுப்பதைப் பற்றி நபிகளாரின் ஹதீஸ் கூறுவதில் சில.

1.  தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவதைப் போல செய்கின்ற தான தர்மங்கள் நாம் செய்த பாவங்களை அழித்து விடுகின்றது.

2. உங்கள் கைப்பொருள் உங்கள் கையைவிட்டுப் போவதற்கு முன் தர்மங்கள் செய்வதில் விரைந்துகொள்ளுங்கள்.

3. திண்ணமாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு திறவு கோல் இருக்கின்றது. அதைப் போல ஏழைகளை நேசித்து ஆதரவு தருவது சொர்க்கத்தின் திறவு கோலாக இருக்கின்றது.

4. தர்மம் செய்வதில் துன்பம் ஏற்படுவதுண்டு. அது இறைவனின் கருணை நம் மீது படுகின்றது என்பதற்கு அடையாளமாகும்.

நம்மிடம் உள்ள செல்வங்களும், பொருட்களும் இறைவன் நமக்களித்தது. அவை இறைவனிட்ட பங்காகும். அந்தப் பங்கில் ஒரு சிறு பகுதியை நாம் பங்கிட்டு அதனை ஏழைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதே இந்த ஈதுப் பெருநாளின் உயரிய நோக்கமாக அல்லாஹ் நமக்கு ஆக்கித் தந்துள்ளான். அதுவே ஏழைகளை மகிழ்விக்கும் ஒரு சிறப்பான நாளாகவும் இருக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.