உறவுகள் அவசியம்!
தனி மரம் தோப்பாக முடியாது. மனிதன் ஒரு சமூக பிராணி. உறவுகள் அவனுக்கு மிக அவசியம். உற்றார் உறவினர்கள் இல்லாமல் வாழ்வில்லை.


தனி மரம் தோப்பாக முடியாது. மனிதன் ஒரு சமூக பிராணி. உறவுகள் அவனுக்கு மிக அவசியம். உற்றார் உறவினர்கள் இல்லாமல் வாழ்வில்லை. ஆனால் அப்படிப்பட்ட உறவினர்கள் உண்மையானவர்களாக இருந்தால்தான் மனிதன் வாழ்வு நலம் பெறுகின்றது.
மனிதர்களோடு உறவு கொள்ளவே, உறவைத் தேடியே இறைமகன் இயேசு மனிதர் ஆனார். அவருக்கு உறவு மிக அவசியமாக இருந்தது. தந்தையோடும், தூய ஆவியோடும் அவர் உறவு கொண்டார். அதனால்தான் படைத்தல், காத்தல், பராமரித்தல் என்பது முழுமையைப் பெற்றது.
மனித உறவிற்காக வந்த இயேசு தனது உன்னதத் தன்மையைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. மாறாகத் தியாகத்தோடு தமது உன்னத நிலையையும் உயிரையும் இழக்க முன் வந்தார். அவர் அப்படி அவற்றைத் துறந்ததினாலேயே நாம் மீட்புப் பெற்றோம். மனிதர்கள் இன்று தங்களைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பிக் கொண்டு தனித் தனித் தீவுகளாக வாழ்ந்து வருவதாலேயே மனித மனத்தில் வாழ்வைப் பற்றிய அச்சம் அதிகரிக்கிறது. மன பாரத்தினால், நிதானமாகச் சிந்தித்துச் செயல்படவேண்டிய நேரங்களில் பதற்றம் ஏற்பட்டு, செயல்களைச் செய்து முடிக்க முடியாமல் போகின்றது. உடனிருந்து உதவுவதற்கும் யாருமில்லாமல் போய்விடுகிறது.
இப்படிப்பட்ட மனிதனுக்கு யாரும் உதவி செய்ய முன் வருவதுமில்லை. தனிமை இவனை விரட்ட இவன் தடுமாறுகின்றான். நோயாளியாய் இவன் வாழ்வு பரிதாபத்திற்குரியதாக மாறுகின்றது.
இயேசு சொன்ன ஊதாரி மைந்தன் உவமையில், இளையவன் பிரிந்து செல்ல முற்படும் போதும், மூத்தவன் கோபப்படும் போதும் தகப்பனார் அவற்றை அனுமதிக்கிறார். பின்னர் இளையவன் திரும்பவரும்போதும் தகப்பன் அவனை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் மூத்தவன் தனித் தீவு போல ஆகிறான். ஆனாலும் தகப்பனாரின் உயர்ந்த நோக்கத்தினால் மூவரும் ஒருவர் ஒருவரை ஏற்று உறவுக்கு முற்படுகின்றார்கள். ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நல்ல விஷயம்.
உறவிலே வாழும் போது, நல்ல முன்மாதிரியாக இருப்பது மிகவும் அவசியமானது. நல்லதொரு முன்மாதிரிகை இல்லாததால்தான் இன்று இளைஞர்கள் சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகர்கள், நாயகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களைத் தங்களது மாதிரிகையாகக் கொண்டு, மாய உலகிலே வாழ்ந்து தங்களது வாழ்வை வீணாக்குகிறார்கள்.. உடன் வாழ்வோர்களின் உறவு சரிவர இல்லாததாலும் அவர்கள் வளரும் தலைமுறையினருக்கு நல்ல மாதிரிகையாக இல்லாததாலும் இன்றைக்கு இளையவர்கள் திசை மாறிச் செல்ல நேரிடுகின்றது. இதனால் சமுதாயம் ஆரோக்கியம் இல்லாத நிலையில் இருக்கின்றது.
இயேசுவின் வருகைக்காலம் உறவின் அற்புதமான காலம். படைத்தவரோடு மட்டுமல்ல, நம்மோடு வாழ்வோரோடும் நாம் அன்புடன் வாழ்வது காலத்தின் கட்டாயம்.
நம்முடைய நல்ல மாதிரிகையின் வழி புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம். மனித உறவுக்காகப் பிறக்கப்போகும் இறைமகனின் தெய்வ தரிசனம் காண்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...