இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடிவரும்: வாரப்பலன்கள்

ஆகஸ்ட் 27 முதல் செப்.2ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடிவரும்: வாரப்பலன்கள்
இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடிவரும்: வாரப்பலன்கள்
Published on
Updated on
5 min read

ஆகஸ்ட் 27 முதல் செப்.2ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.
 

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். செய்தொழிலில் ஆரஞ்சு, செந்நிறப் பொருள்கள் லாபம் தரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆன்மிக அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்கள் இழுபறியாக இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு பங்குதாரர்கள் வழியில் அனுசரணையான போக்குகள் இருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மகசூல் அதிகரிக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். 

அரசியல்வாதிகள் எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது. கலைத்துறையினர் அடுத்தவர்களை நம்பி ஏமாறாதீர்கள். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல் படுத்தவும். பெண்மணிகள் புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்கால வாழ்க்கையைப் பற்றி நல்ல திட்டம் தீட்டுவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கூடிவரும். 

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 28. சந்திராஷ்டமம்: இல்லை.

***

ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)


தந்தைவழி தொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான பாதை அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் சிறிது மனத்தாங்கல்கள் ஏற்படும். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு சாதகமான காலமிது. விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற அனுகூலமான காலமிது. கலைத்துறையினருக்கு எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்மணிகள் விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்கான இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகளுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். 

பரிகாரம்: கூத்தனூர் சரஸ்வதி தேவியை பிரார்த்தனை செய்யவும். அனுகூலமான தினங்கள்: 27, 29. 
சந்திராஷ்டமம்: இல்லை.

***

மிதுனம்
(மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் நண்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சிக்கனமாக இருந்து சேமிப்பைக் கூட்டுங்கள். குடும்பத்தினர், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் சில பிரச்னைகள் உண்டாகும். மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதை சற்று தள்ளிப் போடவும். விவசாயிகள் நீர்ப்பாசன விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மராமத்துப் பணிகள் அனைத்தும் நல்லபடியாக முடியும். 

அரசியல்வாதிகளின் செயல்கள் வெற்றி பெறுவதில் சிரமம் உண்டாகும். எதிர்க்கட்சியினரால் சில தொல்லைகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு பொருளாதார சிக்கல்களால் மனக்குழப்பம் ஏற்படும். சக கலைஞர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவருடன் சண்டையிடாதீர்கள். மாணவமணிகள் திட்டமிட்டு உழைத்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம். பெற்றோர்களை அலட்சியப்படுத்தாமல் அவர்களின் ஆலோசனையை மதியுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 29. சந்திராஷ்டமம்: இல்லை.

***
கடகம்
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சமுதாயத்தில் கெüரவமான பதவிகள் உங்களைத் தேடி வரும். பெற்றோரை ஆலோசித்து முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். செய்தொழிலில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். 
உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் பணத்தை பிறர் கையாள அனுமதிக்காதீர்கள். வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பழைமையான யோசனைகள் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும். விவசாயிகளுக்கு தானிய விற்பனை அதிக லாபம் தரும். சந்தையில் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். 

அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாகவே முடியும். உங்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்மணிகள் கணவரிடம் அன்னியோன்யமாக இருப்பீர்கள். உற்றார் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவமணிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விரும்பிய துறையில் படிக்க வாய்ப்பு ஏற்படும்.

பரிகாரம்: தேவி ஸ்ரீகருமாரி அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 29, 30. சந்திராஷ்டமம்: இல்லை.

***

சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

செய்தொழிலில் எதிர்பார்த்த பணவரவும், லாபங்களும் கிடைக்கத் தொடங்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகளைச் சந்திப்பீர்கள். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் நிலை சற்று உயரும். வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடாதீர்கள். விழிப்புடன் செயல்படுவது அவசியம். வியாபாரிகளில் கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். விவசாயிகளுக்கு உற்சாகமான சூழ்நிலை உண்டாகும். மகசூல் பெருகி லாபமடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடும். பயணம் சம்பந்தமான இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினர் வெற்றிப்படிகளில் ஏறுவீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். நிலம், வீடு, மனை போன்ற சொத்துகள் சேரும். மாணவமணிகளுக்கு அயல்நாட்டுத் தொடர்பு நன்மை தரும். மந்த நிலை விலகி, முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 30. சந்திராஷ்டமம்: இல்லை.

***


கன்னி

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

எதிர்பாராத தனலாபங்கள் ஏற்படும். செய்தொழில் நல்லபடியாக நடக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். 

உத்தியோகஸ்தர்களுக்கு இழுபறியாக இருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடியும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகள் நன்மைகளை அடையும் காலமிது. புதிய முதலீடுகளைச் செய்து தொழிலை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். கூலித் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு எங்கும் எதிலும் மறைமுகமான எதிர்ப்புகள் இருக்கும். வழக்கு விவகாரங்கள் சுமுகமான முடிவை எட்டும். கலைத்துறையினருக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். உங்கள் திறமைகள் வெளிப்
படும். பெண்மணிகளுக்கு வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவமணிகள் மனக்குழப்பம் நீங்க யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வரவும். புதிய நண்பர்களுடன் சற்று கவனமாகப் பழகவும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 29, 01. 
சந்திராஷ்டமம்: 27, 28.

***

துலாம்

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)


குடும்பச் சூழல், வேலை, தொழில் போன்றவைகளில் மாற்றங்களைக் காணலாம். தேவையற்ற சில விஷயங்களால் மனக் குழப்பங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம். எதிலும் நிதானம் தேவை. 
உத்தியோகஸ்தர்கள் பேச்சில் கவனமாக இருக்கவும். ரகசியங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகள் புதுத் தொழில் ஆரம்பித்து விரிவாக்கமும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களைக் கவரும். விவசாயிகள் புதிய நிலங்களை குத்தகைக்கு எடுக்க முனைவீர்கள். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டால் எழுச்சியுற்று காரியங்களைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். பெண்மணிகளுக்கு தாய் மாமன் வழி உறவு முறையில் சிறு விரிசல்கள் உண்டாகும். அனைவரிடமும் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மாணவமணிகள் உடற்பயிற்சியை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள். பெரியோர்களை மதித்து நடக்கவும்.

பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 02. சந்திராஷ்டமம்: 29, 30, 31.

***

விருச்சிகம்

(விசாகம் 4-ம் பாதம் முதல்  அனுஷம், கேட்டை முடிய)

சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். பணவரவு நன்றாக இருந்தாலும் தேவையானவற்றுக்கு மட்டும் செலவு செய்தால் போதும். 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சலுகையை எதிர்பார்க்காதீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் சிரமப்பட்டு முடித்து விடுவீர்கள்.

வியாபாரிகளுக்கு வாகனங்களால் செலவுகள் உண்டாகும். பொருளாதாரச் சறுக்கல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். கால்நடைகளின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் பயணங்களால் பல நன்மைகளை அடைவீர்கள். உடல்நிலையை சரிவர கவனித்துக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடமும், உறவினர்களிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். ஆன்மிக ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்ளுங்கள். மாணவமணிகள் போதிய பயிற்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: கந்தன்குடி முருகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 30, 31. 
சந்திராஷ்டமம்: 01, 02.

***

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)


உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். நவீன தொழில்நுட்பத் திறமையை வெளிப்படுத்துவீர்கள். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பிறரிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உங்களின் தொழில் நுட்ப அறிவாற்றல் வெளிப்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கையிருப்புப் பொருள்கள் மீது கவனம் செலுத்துங்கள். விவசாயிகளுக்கு மனத்துணிவு கூடும். சக விவசாயி
களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் அனுகூலமான போக்கு நிலவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். கலைத்துறையினர் சில சோதனைகளைச் சந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் பெருகும். பெண்மணிகளுக்கு சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மாணவமணிகளின் திறமைகள் பளிச்சிடும். படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 29, 01.
சந்திராஷ்டமம்: இல்லை.

***

மகரம்

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் பேச்சில் இனிமையும், திறமையும் வெளிப்படும். உடலாரோக்கியமும், முக வசீகரமும் கூடும். பணவரவு பன்மடங்கு பெருகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை நாடிச்சென்று வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு கால் நடைகளால் வருமானம் உண்டாகும். நீர்ப்பாசன வசதிக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். 
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். திட்டமிட்ட வேலைகளைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்மணிகள் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். கணவரின் அன்பும் அனுசரணையும் மேலோங்கும். மழலை பாக்கியம் கிட்டும். மனதில் உறுதியும், தெம்பும் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம்
 

செலுத்துவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி அடைவீர்கள்.
பரிகாரம்: குல தெய்வத்தை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 31, 02. சந்திராஷ்டமம்: இல்லை.

***

கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

திருமண முயற்சிகள் கைகூடி வரும். இல்லத்தில் சுப விரயங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலமிது. ஆன்மிக சுற்றுலா சென்று மனமகிழ்ச்சியை பெருக்கிக் கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். எவரையும் நம்பி ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தைக் கைவிடவும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயிப்பீர்கள். தானிய விற்பனையில் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவை வளர்த்துக்கொள்ள பாடுபடுவீர்கள். கட்சி மேலிடம்  உங்களை பாராட்டும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் பொழுது கவனமாக செயல்படவும். சக கலைஞர்
களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் வெளிநாடு சென்று படிக்கும் முயற்சிகள் தீவிரமாகும். எதிலும் வேகத்துடன் விவேகமும் தேவை.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 01, 02. சந்திராஷ்டமம்: இல்லை.

***

மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


உங்கள் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தினர் எல்லா விஷயங்களிலும் உங்களை ஊக்கப்படுத்துவார்கள். பதற்றம் இல்லாமல் அமைதியான மனநிலையுடன் செயல்படுவீர்கள்.  


உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். தகுந்த நேரத்தில் பணிகளைச் செய்து முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் முதலீடு செய்ய விரும்புவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். தானியங்களின் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். மேலிடத்தின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். கலைத்துறையினர் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு உயரும். பெண்மணிகளுக்கு கணவருடன் அன்னியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் பாசமும், அன்பும் பெருகும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.