உண்மையைப் பேச வேண்டும். அதையும் பிரியமாகப் பேச வேண்டும். பிரியமில்லாத உண்மையைச் சொல்லக் கூடாது. பிரியமிருந்தாலும் பொய்யைச் சொல்லக் கூடாது; இது பழைமையான தர்மம்.
-மனுஸ்மிருதி
யாருமற்ற அனாதைகளையும், ஏழைகளையும் அடித்துத் துன்புறுத்தக் கூடாது. அதனால் வரும் பாவம் எங்குச் சென்றாலும் தொலையாது தொடர்ந்து வந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
-கொங்கணச் சித்தர்
ஞானி ஒருபோதும் தனிமையில் இல்லை. அவன் தனக்குள்ளேயே அனைத்திற்கும் அதிபதியான இறைவனுடனேயே இருக்கிறான்.
-இந்து மதம்
சிலர் மண்ணாசைக்கும் பெண்ணாசைக்கும் மயங்காத தூய்மையான இதயம் உள்ளவர்கள். அவர்களிடம் ஸ்ரீமந் நாராயணனாகிய என்னுடைய அருட்சக்தியின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். இதற்கு நேர்மாறான வாழ்க்கையில் உழல்பவர்களிடம் ஒருபோதும் நான் வெளிப்படுவதில்லை.
-கருட புராணம்
நாம் சத்தியம், நற்சொல், நற்செயல், பெருந்தன்மை, பொறுமை என்று உலக நன்மைக்கான வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும். இவையெல்லாம் மிகவும் உதவுபவை.
-மகான்களுடைய சீரிய உபதேசம்
பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும் இயல்பாகும். தர்மம் சிறப்பைத் தரும், அதர்மம்துன்பத்தைத் தரும்.
-மணிமேகலை (கந்தில்பாவை)
நாம் வேத சாஸ்திரங்கள் கற்று தேர்ந்த பெரியோர்களை நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால், கற்பகமரம் போல அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளைக் கொடுக்கவல்லது.
-சாஸ்திர நீதிகள்
உழைப்பு உயர்வைத் தரும், நல்ல எண்ணம் நன்மையைத் தரும், ஒழுக்கம் பெருமையைத் தரும்.
-நீதி சாஸ்திரம்
எவ்வளவோ பேசுகின்ற மனிதன், தான் பிறக்கும்போது தன்னுடன் சொத்து சுகங்களை எடுத்து வந்தானா? இல்லை இறந்து சுடுகாடு போகும்போது அவன் எதையாவது எடுத்துக்கொண்டு போகிறானா?
-பட்டினத்தார்
சிவனடியார்கள் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும், விழித்தாலும், மன்றாடும் சிவபெருமான் திருவடிகளை மறவாத உணர்வு உடையவர்கள்.
-பெரிய புராணம்
தேவசக்தியே தூலப் பொருட்களாகவும், சூட்சும பொருட்களாகவும், அமுதமாகவும் விளங்குகிறது.
-பிரச்ன உபநிஷதம் 2.5
யோகிகள் சிலருக்கு சிரத்தை, வீரியம், ஞாபகசக்தி, மனஒடுக்கம், மெய்ப்பொருள் உணர்வு ஆகியவைகள் வாயிலாக சமாதி கூடுவதுண்டு.
-பதஞ்சலி யோக சூத்திரம்
பணம் சேரச் சேர மனமும் மாறிக்கொண்டே போகும். பணத்தாசை பிடித்தவர்களுக்கு நல்ல உறவினர்கள் இருக்கமாட்டார்கள்; பெரியோர்களிடமும் அவர்களுக்கு மதிப்பு இருக்காது
.-சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


