நல்லவர்களின் நட்பை நாட வேண்டும். தீயவர்களின் நட்பை நாடக் கூடாது. பாம்பு எதுவாக இருந்தால் என்ன? விஷம் ஒன்றுதான்! அது போன்று தீயவர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். உள்ளத்தில் தூய்மை இல்லாதவர்களின் நட்பு விஷமாகும்.
-பசவண்ணர்
கற்றுணர்ந்தவர்களுக்குக் கல்வியறிவே அணிகலனாகும்; அவர்களுக்கு மற்றோர் அணிகலன் தேவையில்லை.
-குமரகுருபரர்
இந்த உலகத்தில் தானத்தைப் போன்ற செல்வம் வேறு இல்லை; திருப்தியைப் போன்ற சுகம் வேறு இல்லை; ஒழுக்கத்தைப் போன்ற ஆபரணம் வேறு இல்லை; ஆரோக்கியத்தைப் போன்ற லாபம் வேறு இல்லை.
-பஞ்சதந்திரம்
ஸ்ரீ ராமா! தேவாதி தேவனே! எப்பொழுதும் பாவச் செயல்களையே செய்துகொண்டு காலம் கழித்துக்கொண்டிருக்கும் இந்தக் கெட்டபுத்தி உள்ளவனை, உன்னைத் தவிர வேறு எந்த ராஜகுமாரன் வந்து காப்பாற்றப் போகிறான்?
-மகான் தியாகராஜர்
தீய சிந்தையுடையவனும் ஹரியை நினைப்பானாகில், அவனது பாவங்களை ஹரி போக்குகிறார். தன் விருப்பமின்றி அக்கினியைத் தீண்டினாலும், அது தொட்டவனைச் சுடத்தானே செய்கிறது?
-ஸ்ரீமத் பாகவதம் 2.6.19
இறைவா! நாங்கள் இறப்புடைய மனிதர்கள். நாங்கள் இறப்பு அறியாத இறைவனான உங்கள் பெயரைக் கூறுகிறோம். உங்களுடைய திருநாமங்களையே திரும்பத் திரும்பக் கூறுகிறோம்.
-ரிக் வேதம் 8.11.5
ஒரு நாள் பழகினாலும், மேன்மக்களாகிய பெரியோர்களின் நட்பு பெரிய பூமி பிளக்கும்படி வேரூன்றி நிற்கும்.
-நறுந்தொகை 34
விதி வலிமை வாய்ந்தது. முற்பிறவியில் செய்த தவறுகளின் விளைவுகளை இந்தப் பிறவியில் நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
-வியாத கீதை
இறைவனுக்குச் செய்யப்படும் பணி எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், அது மகத்தான பெருமைக்குரியது.
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
இந்த மனித உடல் ஒரு வீடு போன்றது. இது பாவம் என்ற மழையால் தன்னுடைய பலம் அனைத்தையும் இழந்து விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது. இந்தச் சமயத்தில் உலகப்பற்றால் (விஷயங்களால்) உண்டாகும் சிற்றின்பமாகிய சேற்றைப் பூசுவதால், இதை நிலை நிறுத்திக்கொள்ள முடியுமா?
-ப்ரபோத சுதாகரம்
பாவங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதற்குத் தயங்கக் கூடாது. செய்த பாவத்தை ஒப்புக்கொள்வதில் போலிக் கெளரவமோ, பிடிவாதமோ ஏன் இருக்க வேண்டும்?
-சமண மதம்
அண்டியவர்களை ஆதரிக்க வேண்டும். மனிதர்களுக்கு இதமானதும் உண்மையானதையுமே பேச வேண்டும். யாசிப்பவர்களுக்கு வேண்டியதைத் தானம் செய்ய வேண்டும். நல்லவர்களின் சத்சங்கத்தை நாடுங்கள்.
-வாதிராஜரின் ஹிதோபதேசம், 4
ஸ்ரீ ராமராகிய நான் எல்லா உயிர்களுக்கும் பிராணனாக விளங்குகிறேன். என்னிடமே உன் மனம் நிலைத்திருக்கட்டும்.
-ஸ்ரீ ராமபிரான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


