அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தலிபான் புதிய தலைவராக பஹவல்கான் தேர்வு

பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியின் புதிய தலிபான் தலைவராக பஹவல்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 5:37 pm

தினமணி

பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியின் புதிய தலிபான் தலைவராக பஹவல்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த விவரம்: வஜிரிஸ்தான் பகுதியின் தலிபான் தலைவரான முல்லா நசீர், அமெரிக்காவின் ஆள் இல்லா விமானத் தாக்குதலில் கடந்த வியாழக்கிழமை (ஜன.3) கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் மேலும் 12 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் குழு அடுத்த தலைவராக பஹவல்கானை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

படிப்பறிவில்லாத 34 வயதான பஹவல்கானின் இயற்பெயர் சலாலுதீன் அயூபி. பஸ் டிரைவராகப் பணியாற்றியவர். பிறகு ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அதன்பிறகு ஆப்கன் தலிபான்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அல் காய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள இவருக்கு ஆப்கன் பகுதியிலுள்ள முக்கியமான பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது.

மறைந்த முல்லா நசீரின் நெருங்கிய நண்பரான பஹவல்கான் அவருடைய இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர். இந்திய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியவர்.

மறைந்த முல்லா நசீர், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டியதால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரிடம் அவருக்கு ஓரளவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் பஹவல்கானோ அதற்கு மாறாக, மிகுந்த போர்க்குணமும் எதற்கும் வளைந்துகொடுக்காத கடுமையான மனோபாவம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு: இந்நிலையில் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைக் கண்டித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினர் சனிக்கிழமை தீவிர போராட்டத்தில் இறங்கினர்.

அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உள்ளிட்டவை மூடப்பட்டன. மக்கள் சாலைகளில் கூடி அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தலிபான் முன்னாள் தலைவர் முல்லா நசீர் உள்ளிட்ட 13 தலிபான்கள் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.