மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மெட்ரோ ரயில் பயணம்: அதிக புள்ளிகளைப் பெற்று 50 கிராம் தங்கம் வென்ற தமிழகப் பெண்

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், துபை மெட்ரோ நிறுவனம் நடத்திய சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த சாந்தி ராபின் 50 கிராம் தங்கம் வென்றார்.

News image
Updated On :3 நவம்பர் 2015, 5:43 am

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், துபை மெட்ரோ நிறுவனம் நடத்திய சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த சாந்தி ராபின் 50 கிராம் தங்கம் வென்றார்.

கடந்த 22 ஆண்டுகளாக துபையில் உள்ள ஓர் அரேபியரிடம் வீட்டு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார் ராபின்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது கடவுளிடமிருந்து எனக்கு கிடைத்தப் பரிசு என்றும், மிகவும் சந்தோசமாக உணர்வதாகவும் கூறினார்.

துபை நகரத்தில் என்னுடைய பயணத்தின் போது இதுவரை ஏராளமான புள்ளிகளை பெற்றுள்ளேன். இந்நேரத்தில் என்னை வேலைக்கு அமர்த்தியவருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது வேலை நேரத்திற்குப் பிறகு, வெளியிடங்களுக்கு சுற்றி வருவதற்கு அவர் எனக்கு மிகுந்த சுதந்திரம் அளித்ததாக ராபின் கூறியதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராபின், தனது வேலைகளை முடித்தப் பின்னர், தனது நண்பர்களை சந்திக்க செல்லும் போது துபை மெட்ரோ ரயிலை பயன்படுத்திய நிலையில், அவருக்கு இப்பரிசு கிடைத்துள்ளது.

பொது போக்குவரத்து தினைத்தையொட்டி, துபை சாலை மற்றும் போக்குவரத்து நிறுவனம் கடந்த இரு வாரங்களாக, துபை மக்களை பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறது.

பொதுப் போக்குவரத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஊக்கப் பரிசுகளான பணம், தங்க நாணயம், கைக்கடிகாரம், மடிக் கணினி உள்ளிட்ட விலையுர்ந்த பரிசுகளை  அந்நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.