ஆண்டுதோறும் 5 லட்சம் அகதிகளுக்குப் புகலிடம்: ஜெர்மனி நம்பிக்கை
இன்னும் சில ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் 5 லட்சம் அகதிகளுக்குப் புகலிடம் அளிக்க முடியும் என ஜெர்மனி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இன்னும் சில ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் 5 லட்சம் அகதிகளுக்குப் புகலிடம் அளிக்க முடியும் என ஜெர்மனி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி துணை அதிபர் சிக்மார் கேப்ரியல் கூறியதாவது:
தொடர்ந்து சில வருடங்களுக்கு, ஆண்டுதோறும் 5 லட்சம் அகதிகளை ஜெர்மனியால் ஏற்க முடியும் என நம்புகிறோம்.
இதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. சொல்லப்போனால் ஆண்டுதோறும் 5 லட்சத்தை விட அதிகமான அகதிகளுக்குக் கூட ஜெர்மனி புகலிடம் அளிக்கக் கூடும். இந்த ஆண்டு மட்டும் 8 லட்சம் அகதிகள் ஜெர்மனி நாட்டில் புகலிடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியைப் போலவே பிற நாடுகளும் அகதிகள் சுமையை ஏற்க முன்வர வேண்டும்.
பிற ஐரோப்பிய நாடுகளைவிட பொருளாதாரத்தில் வலுவுடன் இருப்பதால், அதிக விகிதாசாரத்தில் வேண்டுமானால் அகதிகளை ஜெர்மனி ஏற்க முன்வரலாம்.
ஆனால், ஆண்டுக்கு 10 லட்சம் அகதிகளுக்குத் தஞ்சமளித்து, அவர்களை ஒருங்கிணக்க ஜெர்மனியால் முடியாது.
அகதிகள் பிரச்னைக்கு ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி போன்ற ஒரு சில நாடுகளின் ஆதரவை மட்டும் ஐரோப்பிய யூனியன் சார்ந்திப்பதை ஏற்க முடியாது.
எனவே, அத்தகைய கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.
சிரியா அகதிகளுக்கு பிரேசில் வரவேற்பு
பிரேசிலியா, செப். 8: போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரேசில் சுதந்திர தினத்தையொட்டி, அந்த நாட்டு அதிபர் தில்மா ரூùஸஃப் திங்கள்கிழமை ஆற்றிய தொலைக்காட்சி உரையில் கூறியதாவது:
போரின் கோரப் பிடியிலிருந்து தப்பி, உயிர் வாழவும், தங்களது உழைப்பின் மூலம் பிரேசிலின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு வழங்கவும் வரும் சிரியா அகதிகளை வரவேற்க பிரேசில் அரசு தயாராக உள்ளது.
மிகவும் இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் அகதிகளை இருகரம் கூப்பி வரவேற்பது நமது கடமை என்றார் அவர். சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2011-ஆம் ஆண்டிலிருந்து, அந்த நாட்டைச் சேர்ந்த 2,000 பேருக்கு பிரேசில் அடைக்கலம் வழங்கியுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசில்தான் அதிக எண்ணிக்கையில் சிரியா அகதிகளை ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உருகுவேயில் சிரியா அகதிகள் ஆர்ப்பாட்டம்
மான்டவிடேயோ, செப். 8: உருகுவேயிலிருந்து தங்களை வெளியேற அனுமதிக்குமாறு அந்த நாட்டில் தஞ்சமடைந்துள்ள சிரியா அகதிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் மான்டவிடேயோவிலுள்ள முக்கியச் சதுக்கத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் 5 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து அகதிகளில் ஒருவர் கூறியதாவது:
போர் நடைபெறும் சிரியாவிலிருந்து உயிர் பிழைத்து நாங்கள் இங்கு வந்தது, வறுமையில் உழன்று சாவதற்காக அல்ல. உருகுவே நாட்டு மக்கள் அன்பானவர்கள்தான். ஆனால் இங்கு எங்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே இங்கிருந்து வெளியேறி புதிய வாழ்வைத் தேடிக்கொள்ள உருகுவே அரசு எங்களை அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
ஸ்வீடன் நெடுஞ்சாலை மூடல்
கோபன்ஹேகன், செப். 8: டென்மார்க்கிலிருந்து சாலை வழியாக ஸ்வீடன் எல்லையை நோக்கி அகதிகள் கால்நடையாக செல்லத் தொடங்கியதையடுத்து, எல்லைப் பகுதி நெடுஞ்சாலையை டென்மார்க் போலீஸார் மூடினர். டென்மார்க்கின் ராட்பி நகரில் கடல் வழியாக சுமார் 300 அகதிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களில் சுமார் 150 பேர் சாலை வழியாக ஸ்வீடன் எல்லையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், ஸ்வீடன் செல்லும் நெடுஞ்சாலையை போலீஸார் இழுத்து மூடியதுடன், டென்மார்க் அகதிகளாக பலரை பதிவு செய்தனர். எனினும், டென்மார்க்கிலேயே தங்க வைக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் பல அகதிகள் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்ய மறுத்ததால் போலீஸாருக்கும், அகதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...