திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு வழங்கப்பட்ட இந்திய விசா ரத்து

சீனாவில் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா வழங்கிய நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :25 ஏப்ரல் 2016, 7:42 am

சீனாவில் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா வழங்கிய நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது.

அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை சீனா முறியடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவால் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்படும் உய்குர் முஸ்லிம் தலைவருக்கு இந்தியா நுழைவு இசைவு வழங்கியது.

இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்ததாலும், இன்டர்போல் பட்டியலில், துல்குன் இசா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இந்தியா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

தர்மசாலாவில் அடுத்த வாரம் சர்வதேச ஜனநாயக மாநாடு நடைபெறவுள்ளது. இதில் திபெத் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் பங்கேற்கவுள்ளார். ஜெர்மனியில் உள்ள துல்குன் இசா, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நுழைவு இசைவு வழங்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தார். இதனைப் பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம் அவர் இந்தியாவுக்கு வர கடந்த வாரம் அனுமதி அளித்தது.

சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். சீனாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட உய்குர் மக்களை துல்குன் இசா தூண்டுவிடுவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.