இவரிடம் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் உடைகளை வடிவமைக்க முடியாது என்று மறுத்துள்ளார். அதற்கு அவர், 'ஒருவருக்கு ஆடை தயாரித்து கொடுப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட உரிமை ஆகும். தேர்தல் பிரசாரத்தின் போது மெலானியாவின் கணவர் டிரம்ப் இனவெறி பேச்சுக்கள், அவர் மீதான செக்ஸ் புகார்கள், வெளிநாட்டினர் மீதான எதிர்ப்பு கொள்கைகள் என சர்ச்சைகளால் சூழப்பப்பட்டிருந்தார். எனவே மெலானியாவுக்கு நான் ஆடை தயாரித்து வழங்கமாட்டேன். என்னை பொறுத்தவரை எனக்கு பணம் முக்கியமல்ல' என ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.