கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமெரிக்க தேர்தல்: தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி உட்பட 2 இந்தியர்கள் தேர்வு

உலகமே அமெரிக்க அதிபர் தேர்தலை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இல்லினோயிஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் தேர்தலில் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2016, 6:05 am

DIN


நியூ யார்க்: உலகமே அமெரிக்க அதிபர் தேர்தலை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இல்லினோயிஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் தேர்தலில் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி, குடியரசுக் கட்சி வேட்பாளர் பீட்டர் டிசியன்னியை தோற்கடித்துள்ளார்.

43 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி, வளர்ந்து வரும் அரசியல்வாதிகளின் பிரதிநிதியாக விளங்குகிறார். இவருக்கு ஆதரவாக பராக் ஒபாமா பிரசாரத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

புது தில்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் பொறியியல் படித்தவர். பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வழக்குரைஞராக பணியாற்றி, ஊழலுக்கு எதிராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் மற்றொரு இந்தியர் கமலா ஹாரீஸ் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.