இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர்


அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற இந்தியர்கள் அனைவரும் ஹிலாரி கிளிண்டனை முன்னிறுத்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாகக் களமிறங்கியவர்களாவர். அவர்களில் 3 பேர் பிரதிநிதித்துவ சபைக்கும், ஒருவர் செனட் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியர் ஒருவர் செனட் சபைக்குத் தேர்வு செய்யப்படுவது அமெரிக்க நாடாளுமன்ற வராலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவால் முன்மொழியப்பட்ட கமலா ஹாரிஸ் (51) என்ற இந்திய வம்சாவளிப் பெண்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். மனித உரிமைகள் ஆர்வலரான அவர், ஜனநாயகக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவராவார். அதேபோல், பிரதிநிதித்துவ சபைக்கு ஜனநாயக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் சென்னையில் பிறந்தவர்களாவர். அமெரிக்க பிரதிநிதித்துவ சபைக்கு இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. அந்தக் குறையை இம்முறை பிரமிளா ஜெயபால் தீர்த்து வைத்துள்ளார்.
இந்தத் தேர்தலில் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஒபாமாவாலும், பிரமிளா ஜெயபால் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்பெட்டாலும் முன்மொழியப்பட்டனர். இவர்கள், தங்களை எதிர்த்துக் களமிறங்கிய வேட்பாளர்களைக் காட்டிலும் கணிசமான வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளனர்.
இதேபோன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரோ கண்ணா, அமி பேரா ஆகியோர் கலிஃபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டனர். அவர்களில் ரோ கண்ணா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதனிடையே, வெற்றி முகத்தில் அமி பேரா இருந்தபோது, சில காரணங்களுக்காக அவரது தொகுதி வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. வாக்குகளை மீண்டும் எண்ணினாலும் தாம் வெற்றி பெறுவது உறுதி என்று அமி பேரா நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக கமலா ஹாரீஸை முன்மொழிந்தபோது ஒபாமா கூறுகையில், "பிறருக்காக போராடும் குணம் கொண்டவர் கமலா; அதன் காரணமாகவே அவரை செனட் சபை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளோம்; இதற்காக நான் பெருமைப்படுகிறேன்' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...