இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு 'தடா' போட்ட அமெரிக்க நீதிமன்றங்கள்!

சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின் படி ..

News image
Updated On :29 ஜனவரி 2017, 12:12 pm

DIN

வாஷிங்க்டன்: சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின் படி வெளிநாட்டு பயணிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று நியூயார்க், வெர்ஜினியா மாகாண நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக கடந்த 20-ஆம் தேதி டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் உடனடியாக சிரியாவைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தர தடை விதித்தும், ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள்  அமெரிக்காவில் நுழைய 120 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இது தவிர சிரியா உட்பட மேற்குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்கக்கூடாது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த திடீர் உத்தரவு காரணமாக நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட அமெரிக்க விமான நிலையங்களில் நேற்று தரையிறங்கிய 300-க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையா எதிர்த்து அமெரிக்க மனித உரிமை அமைப்பு சார்பில் நியூயார்க் மாகாண நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டோன்லே, உத்தரவில் குறிப்பிட்டுள்ள 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளை நாடு கடத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோல் வெர்ஜினியா மாவட்ட நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்கில் அடுத்த 7 நாட்களுக்கு அகதிகள், சுற்றுலா பயணிகளை வெளியேற்ற தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  அமெரிக்கா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கான  பொதுமக்கள் கோஷமிட்டனர். இதன் காரணமாக போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.