2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

அங்காடியில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:38 pm

DIN

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், தார்ன்டன் நகரில் உள்ள வர்த்தக வளாகத்தில் அமைந்திருக்கும் வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் புதன்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை சுமார் 5 மணி) இந்த சம்பவம் நடந்தது.
இது குறித்து தார்ன்டன் நகர காவல் துறையினர் கூறியது: 
தார்ன்டன் டவுன் சென்டர் என்றும் வர்த்தக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக அவசர உதவி அழைப்புகள் கிடைத்ததையடுத்து, காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். காவலர்கள் அங்கு சென்றபோது துப்பாக்கித் தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலேயே இரண்டு பேர் பலியானது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அங்கு போலீஸார் சென்றடைவதற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தப்பிவிட்டார். அவரைக் குறித்து வாடிக்கையாளர்கள் அளித்த அடையாளங்களின் அடிப்படையில் தேடி வருகிறோம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். கூடுதல் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. புற நகர் பகுதியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, காவல் துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.