இந்தியாவுடன் அமைதியான உறவையே விரும்புகிறோம்: பாகிஸ்தான்

"இந்தியா மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாலும், அந்த நாட்டுடன் அமைதியான நல்லுறவையே விரும்புகிறோம்' என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஜாவேத் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

"இந்தியா மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாலும், அந்த நாட்டுடன் அமைதியான நல்லுறவையே விரும்புகிறோம்' என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஜாவேத் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அவர் பேசியதாவது: சில வரலாற்றுக் காரணங்களாலும், போட்டி மனப்பான்மையாலும் பாகிஸ்தானின் அண்டை நாடுகள் பகை நாடுகளாக இருந்து வருகின்றன. கிழக்கு எல்லையில் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் இந்தியாவும், மேற்கு எல்லையில் நிலைத்தன்மை இல்லாத ஆப்கானிஸ்தானையும் நாம் அண்டை 
நாடுகளாகக் கொண்டுள்ளோம்.
இந்த நாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் ஆபத்துகளாக மாறிவிடாமல் இருப்பதற்கான தேசிய செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இந்த இரு நாடுகளில், ஆப்கானிஸ்தானுடன் தூதரக, ராணுவ, பொருளாதார ஒத்துழைப்பு மூலம் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
அதேபோல், இந்தியாவுடனும் அமைதியான நல்லுறவை ஏற்படுத்தும் நமது நோக்கத்தை பல முறை வெளிப்படுத்தியிருக்கிறோம். இருந்தாலும், இந்தியா அதனை ஏற்பதாக இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com