மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிரியாவில் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஏராளமான ஈரான் படையினர் பலி

சிரியாவில் ராணுவ நிலைகள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 26 அரசு ஆதரவுப் படையினர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:37 pm

DIN

சிரியாவில் ராணுவ நிலைகள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 26 அரசு ஆதரவுப் படையினர் உயிரிழந்தனர்.
அவர்களில் பெரும்பாலனவர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் ஹாமா மாகாணத்திலுள்ள சல்ஹாப் மற்றும் 47-ஆவது பிரிகேட் ராணுவ தளங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
அந்த ஏவுகணைகள் வீசப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, இஸ்ரேல் ராணுவம் அந்தத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், சிரியாவைச் சேர்ந்த 4 பேர் உள்பட 26 வீரர்கள் உயிரிழந்தனர். 
மற்ற 22 வீரர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த அரசு ஆதரவுப் படையினர் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள்.
இதைத் தவிர, அலெப்போ நகருக்கு அருகே நைய்ராப் ராணுவ விமான தளம் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தப் பகுதியில் தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்குதல் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றார் அப்தெல் ரஹ்மான்.
இதுகுறித்து சிரியா அரசு ஊடகம் கூறுகையில், 'எதிரிகளின் புதிய அத்துமீறல்' என்று கண்டனம் தெரிவித்தது.
ஏற்கெனவே, ஹாம்ஸ் மாகாணத்தில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 ஈரானியர்கள் உள்பட 14 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அந்த நாடுதான் சிரியாவிலுள்ள ஈரான் நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பரவலாகக் கூறப்படுகிறது.
'தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது'

Story image


சிரியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்து தங்களுக்கு 'எதுவும் தெரியாது' என்று இஸ்ரேல் உளவுத் துறை அமைச்சர் யிஸ்ரேல் காட்ஸ் ராணுவ வானொலியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
எனினும், சிரியாவில் நிலவி வரும் வன்முறை, குழப்பம், நிலையற்ற தன்மை ஆகிய அனைத்துக்கும், அந்த நாட்டில் ஈரான் தனது ராணுவத்தை அனுப்பியதுதான் காரணம் என்று அவர் கூறினார்.
ஏற்கெனவே, ஹாம்ஸ் மாகாணத்திலுள்ள டி-4 விமான நிலையத்தில் கடந்த மாதத் துவக்கத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.
இருந்தாலும், இஸ்ரேல்தான் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கக் கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிரியா உள்நாட்டுப் போரில் ஈரான் ஈடுபடுவதற்கு எதிராக இஸ்ரேல் நீண்ட காலமாகவே எச்சரிக்கை விடுத்து வந்ததைக் குறிப்பிடுகின்றனர்.
டி-4 விமான தளத்திலிருந்து ஈரான் தங்கள் நாட்டின் மீது ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதாக இஸ்ரேல் கடந்த பிப்ரவரி மாதம் குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலடியாக சிரியாவிலுள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நிகழ்த்தியது. அப்போது, தாக்குதல் நிகழ்த்த வந்த இஸ்ரேலின் எஃப்-16 ரக போர் விமானத்தை சிரியா படையினர் சுட்டு வீழ்த்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது.
இதையடுத்து, சிரியாவிலுள்ள வான் பாதுகாப்பு மண்டலங்கள், ஈரான் நிலைகள் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்தது. இந்த இலக்குகளில் டி-4 விமான தளமும் ஒன்று என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.