கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட சிக்கல்: அம்பலத்திற்கு வந்த ஐந்து கோடி பேரின் தகவல்கள்  

கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது. 
கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட சிக்கல்: அம்பலத்திற்கு வந்த ஐந்து கோடி பேரின் தகவல்கள்  
Published on
Updated on
1 min read

கலிபோர்னியா: கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது. 

பிரபல தேடுபொறி தளமான கூகுளின் சார்பாக இயங்கி வரும் சமூக வலைத்தளம் கூகுள் பிளஸ். பேஸ்புக்கிற்கு போட்டியாக துவங்கப்பட்டாலும் இது அத்தனை புகழ்பெறவில்லை. இந்நிலையில் கடந்த வருடம் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும்  ஒரு கணினிப் பிழையின் காரணமாக கூகுள் பிளஸ் பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் அந்தரங்கத் தகவல்கள திருடப்பட்டது தெரிய வந்தது. அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக இந்த திருட்டு நடந்து வந்திருப்பது அதிர்ச்சியளித்தது. 

இதன் காரணமாக அடுத்தவருடம் ஆகட்ஸ் மாத்ததுடன் கூகுள் பிளஸ் சேவை நிறுத்தபப்படுவதாக அக்டோபர் மாதமே கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது  

இந்நிலையில் கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் ஒரு கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அமபலத்திற்கு வந்துள்ளது.   

இதுதொடர்பாக 'வயர்ட்' இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:

கூகுள் தளமானது கூகுள் பிளஸ்சில் கடந்த மாதம் மீண்டும் ஒரு 'பக்' இருப்பதைக் கண்டறிந்தது. உடனடியாக செயல்பட்டு அந்த பிழை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் தவறாக கையாளப்படவில்லை என்று கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. 

ஆனால் இந்த பக்கின் மூலம் பயனாளர்கள் ஐந்து கோடியே இருபத்தைந்து லட்சம் பேரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அந்தரங்க ப்ரொபைல்கள் உள்ளிட்ட தகவல்கள் வெளிப்பயன்பாட்டிற்கு எளிதாக  கிடைத்துள்ளது என்பது தெரிய வநதுள்ளது 

இதன்காரணமாக கூகுள் பிளஸ் சேவை அறிவிக்கப்பட்டதற்கு சற்று முன்னதாக வரும் ஏப்ரல் மாத்ததுடன் நிறுத்தபப்டுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com