கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இஸ்ரேல்: தேர்தல் கணிப்பில் நெதன்யாகு முன்னிலை

இஸ்ரேலில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்

News image
Updated On :26 டிசம்பர் 2018, 12:46 am IST


இஸ்ரேலில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தேர்தல் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில், தற்போதைய அமைச்சரவையின் ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை அறிவித்தார்.
அதையடுத்து, தி பேனல்ஸ் பாலிடிக்ஸ் என்ற ஆய்வு அமைப்பு முதல் முறையாக நடத்திய தேர்தல் கணிப்பில், நாடாளுமன்றத்தின் 120 இடங்களில் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி 30 இடங்களையும், அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் வலதுசாரி கூட்டணி பெரும்பான்மையான இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் பிரதமராவதற்கு சட்ட சிக்கல்கள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.