ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'சீன புத்த மடாலய தீ விபத்துக்கு சதி வேலை காரணமில்லை'

திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தமடாலயம் தீக்கிரையான சம்பவத்துக்கு சதி வேலை காரணமில்லை என்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:21 pm

DIN

திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தமடாலயம் தீக்கிரையான சம்பவத்துக்கு சதி வேலை காரணமில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற தலைநகர் லாசாவில் உள்ள 'ஜோகாங்' புத்த மடாலயத்தில் கடந்த சனிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது தளத்தில் பற்றிய தீ மளமளவென பரவத் தொடங்கியதில் 50 சதுர மீட்டர் பரப்பளவிலான பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகியது. அதிருஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
புத்த மடாலயம் திடீரென தீப்பற்றியதற்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்துக்கு யாருடைய நாச வேலையும் காரணமில்லை உறுதியாகியுள்ளது என்றனர். இந்தியாவின் விகாரா, திபெத் மற்றும் நேபாளம் நாடுகளின் கட்டடக்கலை பாணிகளை ஒருங்கிணைத்து 'ஜோகாங்' புத்த மடாலயம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.