வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த நீதிபதியினை தேர்வு செய்யும் பணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வந்தார்.
முதல்கட்டமாக 25 பேர் கொண்ட உத்தேச பட்டியல் தயார் செய்யப்பட்டது. இப்பட்டியலில் இந்தியர் ஒருவரது பெயரும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதில் இருந்து தேர்வான 4-பேரிடம் கடந்த 2-ந் தேதி ட்ரம்ப் நேர்காணல் நடத்தினார். இதைத் தொடர்ந்து மேலும் சிலரிடமும் நேர்காணல் நடத்திய பிறகு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 நீதிபதிகளின் பெயரகள் இடம் பெற்றிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என தொலைக்காட்சி உரையில் டிரம்ப் கூறி இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 53 வயதாகும் பிரெட் கவனாக் முன்னர் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


