பனாமா ஆவண ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு (68) சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, மருத்துவ நிபுணர் குழு அவரை திங்கள்கிழமை பரிசோதித்தது.
பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள அவென்ஃபீல்டு வளாகத்தில் குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த மூவரும் ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், நவாஸ் ஷெரீஃபின் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவை முழுவதும் செயலிழக்கும் நிலையில் இருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, இருதயவியல், நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு தேர்ச்சி பெற்ற 4 மருத்துவ நிபுணர் குழு, அடியாலா சிறையில் நவாஸ் ஷெரீஃபில் உடல் நிலையை முழுமையாகப் பரிசோதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, நீரழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறுஉடல் நலக் கோளாறுகளால் அவதிப்படும் நவாஸ் ஷெரீஃபுக்கு, லண்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










