மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு 

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்னிக்கை 36 ஆக உயர்ந்தது.

News image
Updated On :17 ஜூன் 2018, 10:24 am

DIN

காபுல்: ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்னிக்கை 36 ஆக உயர்ந்தது.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரம்ஜானை முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

சனிக்கிழமையன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டதால் ஆயுதங்கள் ஏதும் இன்றி தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர், அங்கிருந்த அரசுப் படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் நிகழ்வைக் கொண்டாடினர். 

அப்போழுது நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் பகுதியில் தலிபான்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.  இந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் சனிக்கிழமையன்று  வெளியானது.

இந்நிலையில் தாக்குதலில் படு காயமடைந்த மேலும் சிலர் அடுத்தடுத்து ஞாயிறன்று உயிரிழந்ததால் பலியானோரின் எண்ணிக்கை இன்று 36 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.