மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கை: மாயமானோர் தகவல் தொடர்பு அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது மாயமானவர்கள் பற்றிய விவரங்களை திரட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலகத்துக்கான உறுப்பினர்களை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 8:51 pm

DIN

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது மாயமானவர்கள் பற்றிய விவரங்களை திரட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலகத்துக்கான உறுப்பினர்களை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த சிறப்பு அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்படும். 
அந்தச் சட்டத்தின்படி, மாயமானவர்கள் தகவல் தொடர்பு அலுவலகத்துக்கு 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், சட்ட நிபுணர் சலியா பெரிஸ் தலைமையின் கீழ் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக நீடிப்பார்கள். 
இவர்களைத் தவிர, தமிழ் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 2 பேரும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அலுவலகம், உள்நாட்டுப் போரின்போது மாயமானவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். மேலும், போரின்போது மாயமாகி உயிர் பிழைத்தவர்களை, அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது, பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 
அந்த காலக்கட்டத்தில், அரசுப் படையினர் 5 ஆயிரம் பேர் உள்பட சுமார் 25 ஆயிரம் பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்றை இலங்கை அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு நியமித்தது. 
மேலும், சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, மாயமானோர் தகவல் தொடர்பு அலுவலகத்தை இலங்கை அரசு அமைத்தது. அந்த அலுவலகத்தின் உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.