துபை: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில், திருமணமான 15 நிமிடங்களில் மணமகன தனது மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் பெண்ணைத் திருமணம் செய்யும் இளைஞன் பெண் வீட்டாருக்கு 'மகர்' எனப்படும் திருமணப் பணம் வழங்குவது வழக்கம். அந்த வகையில். துபையினைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 100000 திர்ஹாம் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன், என்று மணமகளின் தந்தையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, ஷரியத் நீதிமன்ற அலுவலகத்தில் திருமண ஒப்பந்த பத்திரத்தில் தம்பதிகள் கையெழுத்திட்டவுடன் 50000 திர்ஹாமும், அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் மீதி 50000 திர்ஹாமும் கொடுப்பதாக ஏற்பாடு.
பின்னர் அனைவரது முன்னிலையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஒப்பந்தப்படி கையெழுத்திட்டதும் முதலில் 50000 திர்ஹாமை மணமகன் தனது மாமனாரிடம் வழங்கியுள்ளார். திருமணம் முடிந்த வெளியில் வந்தவுடனேயே மீதியுள்ள 50000 திர்ஹாமை தருமாறு மணமகளின் தந்தை வற்புறுத்தியுள்ளார்.
பணம் காரிலிருப்பதாகவும் சிறிது நேரத்தில் சென்று எடுத்து தருவதாகவும் மணமகன் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்காத மாமனார், யாரையாவது அனுப்பி உடனே எடுத்து வந்து தருமாறு சண்டையிட்டுளார். இதனால் கோபம் கொண்ட மணமகன், தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாகக் கூறி, உங்களது பெண்ணுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி திருமணமான 15 நிமிடத்திலேயே மூன்று முறை தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார். இதன் காரணமாக அங்கே பரபரப்பு உண்டானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் பதிவு செய்துள்ளேன்! - மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி விடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்!

பழனிக்கு மொட்டை போட்டது யார் என்று காலப்போக்கில் தெரியும்! அமைச்சர் செங்கோட்டையன்

விஷ்ணு விஷால் பிறந்த நாள்... இரண்டு வானம் சிறப்பு போஸ்டர்!

குவைத்தின் நீர் சுத்திகரிப்பு மற்றும் மின்சார நிலையம் மீது ஈரான் கடும் தாக்குதல்!
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



