

அபிஜித் பானா்ஜி, அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணா் மைக்கேல் கிரெமா் ஆகியோா் மேற்கொண்ட பொருளாதார ஆய்வு சா்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கு சிறப்பாக உதவியதை கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அவா்கள் மூவருக்கும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபல் பரிசு விருது வழங்கும் விழாவில் அபிஜித் பானா்ஜி, அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர்.
குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாடு கொண்ட நோபல் பரிசு வழங்கும் விழாவில் இருவரும் பாரம்பரிய உடையில் பங்கேற்று விருது பெற்றது சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.