அமெரிக்க வணிகப் பொருட்கள் மீதான கூடுதல் வரி வசூலிப்பு இடைநீக்கம்

 சீனா அமெரிக்கா இடையே வர்த்தகப் பிரச்னை தொடர்பான கலந்தாய்வின் முடிவை நடைமுறைப்படுத்தும்..
அமெரிக்க வணிகப் பொருட்கள் மீதான கூடுதல் வரி வசூலிப்பு இடைநீக்கம்
Published on
Updated on
1 min read


சீனா அமெரிக்கா இடையே வர்த்தகப் பிரச்னை தொடர்பான கலந்தாய்வின் முடிவை நடைமுறைப்படுத்தும் வகையில், டிசம்பர் 15ஆம் நாள் 12 மணிக்கு முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சில இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதலாக 10 விழுக்காடு மற்றும் 5 விழுக்காடு சுங்கவரி வசூலிக்கும் நடவடிக்கையையும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனம் மற்றும் உதிரிப்பாகங்கள் மீதான கூடுதல் சுங்கவரி வசூலிப்பைத் தற்காலிகமாக நிறுத்துவதென சீன அரசவையின் சுங்கவரி ஆணையம் முடிவெடுத்துள்ளது.

மேற்கூறிய நடவடிக்கைகளைத் தவிர்த்து, அமெரிக்க உற்பத்தி பொருட்கள் மீதான கூடுதல் சுங்கவரி வசூலிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து விதிகளின்படி மேற்கொள்ளப்படும். அதோடு அமெரிக்க உற்பத்திப் பொருட்கள் மீதான கூடுதல் சுங்கவரி விதி விலக்கு அளிப்பதற்கான பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமத்துவம், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுடன் இணைந்து பாடுபட்டு, தத்தமது அக்கறை உள்ள முக்கிய பிரச்னைகளை உரிய முறையில் தீர்த்து, சீன-அமெரிக்க வர்த்தக உறவின் சீரான வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com