இந்தோனேசியாவில் பெய்த பெருமழை: 42 பேர் பலி
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவில் சனிக்கிழமையன்று பெய்த பெருமழையில் 42 பேர் பலியாகியுள்ளனர்.


ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவில் சனிக்கிழமையன்று பெய்த பெருமழையில் 42 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா. இங்குள்ள சென்டானி பகுதியில் சனிக்கிழமையன்று கடும் மழை பெய்தது. இதில் பல வீடுகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டன. இதில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
தற்போது அந்தப்பகுதியில் மழை குறைந்துள்ளது. இருந்தாலும் அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணி கொஞ்சம் தாமதாமாகி வருகிறது. மீட்பு பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...